ஆசிரியர் தகுதித்தேர்வு வினாத்தாள் மோசடி: வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலரிடம் விசாரணை

ஆசிரியர் தகுதித்தேர்வு வினாத்தாள் மோசடி குறித்து பென்னாகரம் பகுதியை சேர்ந்த வருவாய் ஆய்வாளர் மற்றும் கிராம நிர்வாக
அலுவலரிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
செல்போன்களில் ஆய்வு
தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான வினாத்தாள் வழங்குவதாக கூறி பணம் பறித்து மோசடி செய்தது தொடர்பாக கணபதி, எஸ்தர், இளையராஜா, அசோகன், கிருஷ்ணப்பா, சந்திரசேகரன் ஆகிய 6 பேர் கடந்த 17–ந்தேதி கைது செய்யப்பட்டனர். இவர்களுக்கு வினாத்தாள் தொடர்பான தகவல்கள் எப்படி கிடைத்தது? இவர்கள் பணம் பெற்றவர்களுக்கு வினாத்தாள் வழங்கினார்களா? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டது.
இந்த மோசடி தொடர்பாக அரூர் பகுதியை சேர்ந்த ஜேம்ஸ், வெங்கடாசலம், வெங்கட்செல்வம், சீனிவாசன், ரமேஷ் ஆகிய 5 பேரும் கைது செய்யப்பட்டனர். வினாத்தாள் மோசடியில் கைது செய்யப்பட்டவர்களின் செல்போன் எண்களில் வந்த அழைப்புகள் குறித்து போலீசார் ஆய்வு நடத்தினார்கள்.
2 பேரிடம் விசாரணை
இந்தநிலையில் வினாத்தாள் மோசடி தொடர்பாக போலீசாரால் தேடப்பட்டு வரும் பென்னாகரம் பகுதியை சேர்ந்த ஒருவரின் செல்போனுக்கு பென்னாகரம் பகுதியை சேர்ந்த ஒரு வருவாய் ஆய்வாளர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் அடிக்கடி பேசியிருப்பது தெரியவந்தது. இதனையடுத்து சம்பந்தப்பட்ட வருவாய் ஆய்வாளர் மற்றும் கிராம நிர்வாக அலுவலரை குற்றப்பிரிவு போலீசார் தங்கள் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்து விசாரணை நடத்தினார்கள்.
குரூப்–2 தேர்வில் வெற்றி பெற்று தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் பயிற்சி பெற்று வந்த இளையராஜா என்பவர் வினாத்தாள் மோசடி தொடர்பாக ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளார். அரசு துறையை சேர்ந்தவர்களுக்கு இந்த விவகாரத்தில் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து அவரிடம் விரிவாக விசாரணை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதற்காக அவரை காவலில் எடுக்க போலீசார் திட்டமிட்டு இருப்பதாக தெரிகிறது. வினாத்தாள் மோசடியில் அரசு துறையை சேர்ந்த சிலரும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...