இதுவல்லவோ சரியான தருனம்? Kanaga Raja-AFROM FACEBOOK TIMES LINE...

இப்போது கேட்காவிட்டால் நாம் எப்போது கேட்போம். உடனடியாக காலம் தாழ்த்தாமல் செய்யவேண்டிய தருனம் தோழர்களே.
இடைநிலை ஆசிரியர்களே அனைத்து ஆசிரியர் இயக்கங்களையும் கூட்டுப்போராட்டத்திற்கு கொண்டு வர நீங்கள் இணைந்துள்ள இயக்கத்தினை வற்புறுத்துங்கள். வட்டாரச் செயலாளர் முதல் மாவட்டச் செயலாளர் வரை கேள்விக் கணைகளைத் தொடுங்கள். இடைநிலை ஆசிரியர் பிரச்சினை தீர இயக்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கை என்ன என்று கேளுங்கள். கூட்டுப் போராட்டத்திற்கு வராமல் தனி இயக்க நடவடிக்கை என்று கூறினால் விட்டு விடாதீர்கள். கடந்த காலங்களில் கூட்டுப் போராட்டத்தின் விளைவாகவே ஊதியக் குழு முரண்பாடுகள் களையப்பட்ட சூழலில் தற்போது அதனை முன்னுதாரணமாகக் கொண்டு மற்ற இயக்கங்கள் டிட்டோஜாக் கில் இணைந்து போராட முடிவெடுத்திருக்கும் போது நாம் ஏன் தனியாக போராட வேண்டும் என்று கேளுங்கள். உறுப்பினரான உங்களின் நலன் காக்கவே இயக்கங்கள் தலைவர்களின் நலன் காக்க அல்ல . உங்கள் வற்புறுத்தலால் உங்கள் இயக்க தலைமை கூட்டுப்போராட்டத்தை நோக்கி நகர வாய்ப்புள்ளது. அடி மேல் அடி வைத்தால் அம்மியும் நகரும் என்பது பழமொழி. உண்மையிலேயே எண்ணிக்கையில் அதிகமானவர்கள் இடைநிலை ஆசிரியர்கள் தான். இடைநிலை ஆசிரியறின்றி எந்த இயக்கமும் இயங்க முடியாது.ஆகவே நம் முடிவே இயக்க முடிவு என்ற நிலையை உருவாக்குங்கள். இடைநிலை ஆசிரியர்களின் ஊதியப் பிரச்சினை தீர தமிழக அளவில் அனைத்து ஆசிரியர் இயக்கங்களின் ஒட்டு மொத்த கூட்டுப்போராட்டமே தீர்வு. யாரையும் புண்படுத்தும் நோக்கமல்ல இது. ஆசிரியர் இனம் பகைமை மறந்து ஒற்றுமை காக்க வேண்டியு தருணம் இது. வேற்றுமைகளைப் புறந்தள்ளி ஆசிரியர் இனம் என்ற ஒற்றூமையின் மூலம் இழந்ததை மீட்போம் வாருங்கள் தோழர்களே! சக நண்பர்களிடம் பகிரவும் தோழர்களே.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...