அரசு பள்ளிக்கூடங்களில் பணியாற்றும் 1,161 ஆங்கில ஆசிரியர்களுக்கு பயிற்சி

தமிழக அரசு கடந்த ஆண்டு முதல் அரசு பள்ளிக்கூடங்களில் ஆங்கில வழிக்கல்வியை அறிமுகப்படுத்தி உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் 138 பள்ளிக்கூடங்களில் ஆங்கில வழிக்கல்வி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இதில் 1–ம் வகுப்பு மற்றும் 2–ம் வகுப்பில் 2 ஆயிரத்து 650 மாணவ–மாணவிகளும், 6–ம் வகுப்பு மற்றும் 7–ம் வகுப்பில் 1,799 மாணவ–மாணவிகளும் என மொத்தம் 4 ஆயிரத்து 449 மாணவ–மாணவிகள் படித்து வருகிறார்கள்.

ஈரோடு மாவட்ட அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் மாணவ–மாணவிகளுக்கு எளிதான முறையில் ஆங்கிலம் கற்றுக்கொடுப்பது குறித்த பயிற்சி ஆசிரியர்களுக்கு நேற்று அளிக்கப்பட்டது. இதில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள 20 ஒன்றியங்களில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு அந்தந்த ஒன்றியங்களில் பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் மொத்தம் 1,161 ஆசிரிய–ஆசிரியைகள் கலந்துகொண்டனர்.

ஈரோட்டில் உள்ள அனைவருக்கும் கல்வி இயக்க அலுவலகத்தில் நடைபெற்ற பயிற்சியை அனைவருக்கும் கல்வி இயக்க கூடுதல் முதன்மை கல்வி அதிகாரி சுப்பிரமணி தொடங்கி வைத்தார். ஈரோடு வட்டார வளமைய ஆசிரிய பயிற்றுனர்கள் அனிதா, கல்பனா நாகேஸ்வரி ஆகியோர் கலந்துகொண்டு பயிற்சி அளித்தார்கள். இதில் மாவட்ட தொடக்க கல்வி அதிகாரி மல்லிகா, வட்டார வளமைய மேற்பார்வையாளர் ரமணி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...