பாரிமுனையில் சாலைமறியலில் ஈடுபட்ட பார்வையற்ற பட்டதாரிகள் 150 பேர் கைது

பாரிமுனையில் சாலைமறியலில் ஈடுபட்ட 150 பார்வையற்ற பட்டதாரிகளை போலீசார்  கைது செய்தனர். இதனால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பார்வையற்ற பட்டதாரிகள்
பார்வையற்ற பட்டதாரிகள், முதுகலை பட்டதாரிகள் 850 பேருக்கு ஆசிரியர்கள் பணி வழங்க வேண்டும். ஆசிரியர் தகுதித்தேர்வில் பார்வையற்றோர்களுக்கு 40 சதவீத மதிப்பெண்களை குறைந்தபட்ச மதிப்பெண்ணாக நிர்ணயிக்க வேண்டும். அறநிலையத் துறையில் இசை
துறையில் புலமை பெற்ற 100 பட்டதாரிகளுக்கு ஓதுவார் பணி வழங்க வேண்டும். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இசையாசிரியர் பயிற்சி பெற்ற பார்வையற்றோர்களையே இசை ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கத்தினர் கடந்த 7 நாட்களாக சென்னையின் பல இடங்களில் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டு போலீசாரால் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
8–வது நாளாக மறியல்
8–வது நாளாக சென்னை பாரிமுனை ராஜாஜி சாலையில் திரண்ட பெண்கள் உட்பட 100–க்கும் மேற்பட்ட பார்வையற்ற பட்டதாரிகள் சாலைமறியலில் ஈடுபட்டனர். அப்போது கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் கோஷமிட்டனர்.தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வடக்கு கடற்கரை போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து செல்லுமாறு கூறினர். ஆனால் அவர்கள் மறுத்தனர்.
150 பேர் கைது
இதனையடுத்து சாலைமறியலில் ஈடுபட்ட 150 பேரை போலீசார் கைது செய்தனர். இதில் கைதாக மறுத்த சிலரை போலீசார் குண்டு கட்டாக தூக்கி வாகனத்தில் ஏற்றினர். கைது செய்யப்பட்ட அனைவரும் அப்பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.போக்குவரத்து நெரிசல் மிகுந்த பாரிமுனை ராஜாஜி சாலையில் பார்வையற்றோர்களின் இந்த திடீர் சாலைமறியலால் அப்பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...