பிளஸ் 2 தனித்தேர்வுக்கு விண்ணப்பம் எப்போது

"விரைவில் நடக்க உள்ள பிளஸ் 2 தனித்தேர்வுக்கு, இன்று முதல், 10ம் தேதி வரை, இணைய தளம் வழியாக, மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்'
என, தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
அறிவிப்பு விவரம்:

ஏற்கனவே, தேர்வை எழுதி தோல்வி அடைந்தவர்கள், "எச்' வகை விண்ணப்பத்தையும், 10ம் வகுப்பு முடித்துவிட்டு, நேரடியாக, பிளஸ் 2 தேர்வை எழுத விரும்பும் தேர்வர்கள், "எச்பி' வகை விண்ணப்பத்தையும் விண்ணப்பிக்க வேண்டும். www.dge.tn.gov.in என்ற இணையதளம் வழியாக, இன்று (5ம் தேதி) முதல், 10ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். தேர்வர்கள், விவரங்களை பூர்த்தி செய்வதுடன், தங்கள் புகைப்படத்தை, இணையதளத்தில், "அப்லோட்' செய்ய வேண்டும். புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பத்தையும், தேர்வுக் கட்டணம் செலுத்த வேண்டிய, "செலானையும்' பதவிறக்கம் செய்ய வேண்டும். தேர்வு இடத்தில், எந்த கல்வி மாவட்டத்தை குறிக்கின்றனரோ, அந்த மாவட்டத்திற்குரிய மாவட்ட கல்வி அலுவலகத்தில், பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தையும், கட்டண ரசீதையும் சமர்ப்பிக்க வேண்டும். வரும் 8,9 ஆகிய தேதிகளை தவிர்த்து, 11ம் தேதி மாலை, 5:45 மணி வரை, விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். இவ்வாறு, தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...