ஆசிரியர்கள் எம்ஃபில் படித்தால் 3-ஆவது ஊக்க ஊதியம் உண்டு

எம்ஃபில் படிப்புக்கு 3-ஆவது ஊக்க ஊதியம் வழங்கலாம் என்ற உத்தரவு அனைத்து ஆசிரியர்களுக்கும் பொருந்தும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

  மதுரை சௌராஷ்டிரா மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் கே. நாகசுப்பிரமணியன் உள்ளிட்ட 5 ஆசிரியர்கள் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ். மணிக்குமார் இவ்வாறு உத்தரவிட்டார்.

  உத்தரவு விவரம்: ஆசிரியர்களின் அறிவை மேலும் வளர்த்துக் கொள்ளும் வகையில் கூடுதல் கல்வி பெற்றவர்களுக்கு ஊக்க ஊதியம் வழங்கப்படுகிறது. மனுதாரர் எம்ஃபில் பட்டப்படிப்பு பெற்றதற்கு 3-ஆவது ஊக்க ஊதியம் வழங்க கோரியுள்ளார். ஏற்கெனவே எம்ஃபில் படிப்புக்கு 3-ஆவது ஊக்க ஊதியம் வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.   அதையே மதுரை மாவட்ட கல்வி அலுவலரும் பின்பற்றி ஊக்க ஊதியம் வழங்கியிருக்க வேண்டும். நீதிமன்றங்கள் பிறப்பிக்கும் உத்தரவு அடிப்படையில் அரசு அவ்வப்போது உத்தரவுகளை வெளியிடுகிறது. 

  இந்த விஷயத்தைப் பொருத்தவரையிலும் ஊக்க ஊதியம் கோரிய மனுதாரரின் மனுவை நிராகரித்த மாவட்ட கல்வி அலுவலரின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. 

  மனுதாரர் மீண்டும் ஊக்க ஊதியம் பெறுவதற்கான ஆவணங்களைத் தாக்கல் செய்ய வேண்டும். அதை மாவட்ட கல்வி அதிகாரி முறையாகப் பரிசீலித்து  நீதிமன்ற உத்தரவு மற்றும் அரசு உத்தரவுகளைப் பின்பற்றி தகுந்த முடிவு எடுக்க வேண்டும். 

  உயர் நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவுகள் தனிநபர்களுக்காக பிறப்பிக்கப்படுபவையாக இருந்தாலும், அதன் உள்பொருள் எல்லாருக்கும் பொதுவானது என உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

  மனுதாரர் நாகசுப்பிரமணியம் தனது மனுவில், உயர்நீதிமன்ற உத்தரவு அடிப்படையில் 2013, மார்ச் 28-இல் கே. லதாதேவி என்பவருக்கு எம்ஃபில் படிப்புக்காக 3-ஆவது ஊக்க ஊதியம் வழங்க அரசு உத்தரவு வெளியிட்டுள்ளது.    

அந்த உத்தரவை பின்பற்றி தனக்கும் எம்ஃபில் படிப்புக்கான 3-ஆவது ஊக்க ஊதியம் கேட்ட போது, அரசு உத்தரவு தனிநபருக்கானது என்று கூறி மாவட்ட கல்வி அதிகாரி நிராகரித்து உள்ளதாக மனுதாரர் தனது மனுவில் சுட்டிக் காட்டியிருந்தார்.
நன்றி : தினமலர்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...