398 பாடப்பிரிவுகளுக்கு விண்ணப்ப வினியோகம்

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில், புதிதாக துவங்க உள்ள, 398 பாடப் பிரிவுகளுக்கு, விண்ணப்ப வினியோகம் நடந்து வருகிறது. வேலைவாய்ப்பு சந்தையில் நிலவும் தேவையை கருத்தில் கொண்டு,
அரசு கல்லூரிகளில், பி.ஏ., - இதழியல் மற்றும் தொடர்பியல், பாதுகாப்பு துறை படிப்பு, பி.எஸ்சி., - எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன், நுண்ணுயிரியல், விசுவல் கம்யூனிகேஷன், பி.எஸ்.டபிள்யூ., - சமூக சேவை உள்ளிட்ட, 398 புதிய பாடப்பிரிவுகள் துவங்கப்படும் என, தமிழக பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டது. அரசு அறிவித்துள்ள புதிய பாடப் பிரிவுகளுக்கு, உடனடியாக அரசாணை வெளியாகும் என்று அறிவித்த போதும், அதற்கான அரசாணை வழங்குவதில் இழுபறி நிலவி வந்தது. சமீபத்தில், தமிழக அரசு அனுமதி வழங்கி அரசாணை பிறப்பித்த பின், அனைத்து அரசு கல்லூரிகளிலும், புதிய பாடப்பிரிவுகளுக்கு விண்ணப்ப வினியோகம், தற்போது நடந்து வருகிறது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...