வைகைச் செல்வன் டிஸ்மிஸ்க்கு காரணமான 5 சம்பவங்கள் இவைதானாம்!

பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் பொறுப்பில் இருந்து திடீரென வைகைச் செல்வன் டிஸ்மிஸ் செய்யப்பட்டதற்கு முக்கியமாக 5 சம்பவங்கள் கோட்டை வட்டாரங்களில் சொல்லப்படுகின்றன. அதிமுகவின் இளைஞர் பாசறை செயலாளர், அரசு கொறாடா என தமது பதவி ரேட்டிங்கை அதிகரித்துக் கொண்டே வந்த அருப்புக்கோட்டை எம்.எல்.ஏ. வைகை செல்வனுக்கு அடித்த லக்கி பிரைஸ் பள்ளி கல்வித் துறை அமைச்சர் பதவி. ஆனாலும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பொறுப்பில் ஏற்கெனவே சி.வி. சண்முகம், அக்ரி கிருஷ்ணமூர்த்தி, சிவபதி நீண்டகாலம் அமைச்சர்களாக நீடித்தது இல்லை. அவர்கள் டிஸ்மிஸ் ஆனதற்கு சொல்லப்படும் காரணம் உட்பட 5 விஷயங்கள்தான் வைகைச் செல்வன் பதவிக்கு வேட்டு வைத்ததாம் பள்ளிக் கல்வித் துறை செயலருடன் மோதல்? பள்ளிக் கல்வித் துறை செயலராக இருக்கும் சபீதாவுக்கும் அத்துறை அமைச்சர்களுக்கும் எப்போதுமே ஏழாம் பொருத்தம்தானாம். இதனாலேயே அத்துறை அமைச்சர்கள் யாரும் நிலையாக நீடிப்பதும் இல்லை. இம்முறை வைகைச் செல்வனோ, சபீதாவை தூக்கியடித்துவிடுவதில் படுமும்முரம் காட்டினாராம். விடுவாரா சபீதா? வைகை முந்துவதற்குள் முந்திக் கொண்டார் என்று சொல்லப்படுகிறது. நல்லாசிரியர் விருதில் சிக்கல் ஆசிரியர் தினத்தன்று நல்லாசியர் விருது வழங்குவதற்காகத்தான் புறப்பட்டுக் கொண்டிருந்தார் வைகைச் செல்வன். ஆனால் அதற்குள் பதவிக்கே வேட்டு வைக்கப்பட்டுவிட்டது. அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்காமல் தனியார் பள்ளிகள் விளம்பரம் தேடிக் கொள்ள வாய்ப்பளிக்கும் வகையில் நல்லாசிரியர் விருதுகள் வழங்கப்படுவதாக ஒரு புகார் எழுந்ததாகவும் கூறப்படுகிறது. கூடா நட்பா? சமூகவலைதளங்களில் அதிகமாக திமுக சார்பு நபராக விமர்சிக்கப்பட்டு வருகிறார் ஒரு கவிஞர் கம் எழுத்தாளர். பதிப்பக உரிமையாளரான அவரோ திமுக மேடைகளில்தான் அதிகம். ஆனால் நிகழ்ச்சி ஒன்றில் அப்படிப்பட்ட நபர் சொன்ன கருத்துகளை முன்னுதாரணம் காட்டி அவரை வாயார புகழ்ந்து பேசினாராம் வைகைச் செல்வன். இது மேலிடத்துக்குப் போக செம கடுப்பானார்களாம்.. நீக்குகிற அதிகாரம் இத்துடன் தாம் பேசுகிற பொதுக்கூட்டங்களில் கூட்டம் சேரவில்லையெனில் நிர்வாகிகளை கட்சியைவிட்டு விலக்கிவிடுவேன் என்று தலைவர் ரேஞ்சுக்கு வைகைச் செல்வன் மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இதனை முதல்வர் ஜெயலலிதாவே வைகைச் செல்வனிடன் நேரடியாக கேட்டு இப்படியெல்லாம் பேசுறதுக்கு எனக்கு மட்டும்தானே அதிகாரம் என்று கேட்டு வறுத்தெடுத்ததாகவும் சொல்லப்படுகிறது. பற்ற வைத்தாரா வீணைக் கலைஞர்? அண்மையில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு வேண்டிய வீணைக் கலைஞர், வைகைச் செல்வனை சந்திக்க சென்றிருக்கிறார். ஆனால் வைகைச் செல்வனோ, சரியாக மரியாதை கொடுக்காமல் அனுப்பி வைத்திருக்கிறார். அந்த வீணைக் கலைஞர் ஜெ.விடம் அப்படியே போட்டுக் கொடுத்துவிட்டார் என்றும் ஒரு காரணம் சொல்லப்படுகிறது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...