7-வது சம்பள கமிஷன் அறிவிப்பு: மத்திய அரசு ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி

மத்திய அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டது. மிகவும் எதிர்பார்த்த 7-வது சம்பள கமிஷனை பிரதமர் மன்மோகன்சி்ங், அறிவித்து உத்தரவிட்டார். அத்துடன் ராணுவத்திற்கு
தனியாக சம்பள கமிஷன் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை மத்திய நிதி அமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார். இதன் மூலம் 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் பயனடையப்போகிறார்கள். தேர்தலை மனதில் வைத்து இந்த அறிவிப்பு என எதிர்‌க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.
2016-ல் அமலுக்கு வரும்
6-வது சம்பள கமிஷன் அறிவிக்கப்பட்டு அதன் பரிந்துரைகள், 2006-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதியன்று அமலுக்கு வந்தது. இதன் மூலம் அப்போதைய நிலவரப்படி 35 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் பயனடைந்தனர். இந்நிலையில் 7-வது சம்பள கமிஷனை பிரதமர் மன்மோகன்சிங் அறிவித்தார். இது குறித்து மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், 7-வது சம்பள கமிஷன் குழுவின் தலைவர், உறுப்பினர்கள் பெயர் குறித்த விவரம் விரைவி்ல் வெளியிடப்படும். இதற்கான பரிந்துரைகள் அமல்படுத்த 2 ஆண்டுகள் எடுத்துக்கொள்ளப்படும். (2016-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அமலுக்கு வரும்) இதன் மூலம் 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் பயனடைவர் என்றார்.
தேர்தல் ஆதாயம்
இந்தாண்டு இறுதியில் 5 மாநில சட்டசபை தேர்தல்களும், அடுத்த ஆண்டு லோக்சபா பொதுத்தேர்தலும் வருகிறது. இந்த சூழ்நிலையில் மத்திய அரசு திடீரென 7-வது சம்பள கமிஷனை அறிவித்து மத்திய அரசு ஊழியர்களுக்கு இன்ப அதி்ர்‌ச்சி அளித்துள்ளது. இந்த அறிவிப்பு ,வரப்போகும் பொதுத் தேர்தலை மனதில் வைத்து தான் என எதிர்‌க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.
ராணுவத்திற்கு தனியாக சம்பள கமிஷன்
இதற்கி‌டையே நாட்டின் முதல்முறையாக ராணுவத்தினருக்கு தனியாக சம்பள கமிஷனும் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ராணுவ உயரதிகாரிகள், தங்களது சம்பள பிரச்னை குறித்து மத்திய அரசிடம் முறையிட்டனர். இதில் 6-வது சம்பள கமிஷனின் கோரிக்கை குறித்து வலியுறத்தினர். இந்நிலையில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 7-வது சம்பள கமிஷனுடன், முதன்முறையாக ராணுவத்தினருக்கான சம்பள கமிஷனும் அறிவிக்கப்பட்டுளளது.

Click Here

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...