நியமன உத்தரவில் குளறுபடி: பட்டதாரி ஆசிரியை டிஸ்மிஸ்?

திருப்புத்தூர் அருகே நெற்குப்பையில் பணியாற்றிய பட்டதாரி ஆசிரியை கல்வி சான்று குளறுபடியால் டிஸ்மிஸ் செய்யப்பட்டதாக தெரிகிறது.
கடந்த 2007ல் வேலை வாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில் ஜானகி
என்பவர் புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு பள்ளி ஒன்றில் பட்டதாரி ஆசிரியையாக நியமிக்கப்பட்டார். இவர், பி.எஸ்சி., பி.எட்.,(விலங்கியல்) படிந்திருந்தபோதிலும், இவரது நியமன உத்தரவில் கணித ஆசிரியர் என, குறிப்பிடப்பட்டிருந்தது. ஜானகி இதை வெளியே சொல்லாமல், கணித ஆசிரியையாகவே பணியில் நீடித்தார். சில மாதத்திற்கு முன் சிவகங்கை
மாவட்டம் திருப்புத்தூர் அருகே நெற்குப்பை அரசு பள்ளிக்கு மாறுதலாகி வந்தார். இவரது கல்வித்தகுதி தொடர்பான சான்றுகளை சிவகங்கை கல்வித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அவரது பணி நியமன உத்தரவு கடிதத்தில் கணிதம் என்றும், அவரது கல்வித்தகுதி விலங்கியல் பாடம் என்பதும் தெரியவந்தது. இது குறித்து பள்ளிக்கல்வித்துறை இயக்குனர், ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு சிவகங்கை கல்வித்துறை அதிகாரிகள் அறிக்கை அனுப்பினர். இதைத் தொடர்ந்து ஆசிரியை ஜானகி பணி நியமனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ""ஆசிரியை ஜானகிக்கு பொதுத்தேர்வு கண்காணிப்பாளர் பணி ஒதுக்கீடு செய்வதற்காக அவரது சான்றுகளை ஆய்வு செய்த போது உண்மை தெரிய வந்தது. பதவி உயர்வு ஆசையில் இப்படி அவர் நடந்து கொண்டதாக தெரிவித்தார். ஆனாலும்,அவர் செய்தது தவறு என்பதால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது,'' என்றார். பெயரை சொல்ல மறுத்த பள்ளி தலைமை ஆசிரியை கூறுகையில், ""கடந்த வாரம் இருவரையும் சி.இ.ஓ., அலுவலகத்திற்கு விசாரணைக்கு அழைத்தனர். ஆசிரியை ஜானகியிடம் கடிதம் ஒன்றை அதிகாரிகள் வழங்கினர். அன்றிருந்து, ஜானகி பணிக்கு வரவில்லை. அந்த கடிதம் பற்றி எதுவும் தெரியாது,'' என்றார். ஆசிரியை தவறு செய்திருந்தாலும்,பணி நியமன ஆணை வழங்கியபோது,கவனிக்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை என்ன? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...