போராட்டம்வெற்றி !!! மாற்றுத் திறனாளிகளுக்கு தனியாக ஒரு சிறப்பு டிஇடி தேர்வு

‘பி.எட் படித்து பணியில்லாமல் இருக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கு தனியாக ஒரு சிறப்பு டிஇடி தேர்வு நடத்தப்படும்’ என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். மாற்றுத் திறனாளிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த சில நாட்களாக போராட்டம் நடத்தி வந்தனர். பின்னர், அமைச்சருடன் நடந்த பேச்சுவார்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து போராட்டத்தை விலக்கிக் கொண்டனர். இந்நிலையில் முதல்வர் ஜெயலலிதா தலைமையில் தலைமை செயலகத்தில் ஆய்வு கூட்டம் நடந்தது. இதில் அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம், வளர்மதி, பி.பழனியப்பன், தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன், நிதித் துறை செயலாளர் கே.சண்முகம், மாற்றுத் திறனாளிகள் நலத்துறை செயலாளர் சிவசங்கரன், கல்வித் துறை செயலாளர் அபூர்வ வர்மா, பள்ளிக் கல்வி துறை செயலாளர் டி.சபிதா உள்ளிட்ட அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்துக்கு பின் முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கை:

பி.எட். படித்து பணியில்லாமல் இருக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கு எளிதில் பணி கிடைக்க ஏதுவாக, தனியாக ஒரு சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு (டிஇடி), ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும். இத்தேர்வில் தகுதி பெறும் பி.எட், பட்டதாரிகள் தற்போதுள்ள பின்னடைவு காலி பணியிடங்கள் மற்றும் இனிமேல் ஏற்படக் கூடிய காலி பணியிடங்களில் பணியமர்த்தப்படுபவர்.
இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் பார்வையற்றவர்களுக்கு, மாவட்டங்களில் உள்ள மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனம் வாயிலாக சிறப்பு பயிற்சி வழங்க பள்ளிக் கல்வி துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். பார்வையற்றவர்களுக்கு தேர்வு எழுத உதவும் உதவியாளர்களுக்கு சிறப்பு பயிற்சி வழங்கவும் பள்ளிக் கல்வித் துறை நடவடிக்கை எடுக்கும். முதுகலை பட்டம் பெற்ற 200 பார்வையற்றவர்கள் தற்போதுள்ள பின்னடைவு காலி பணியிடங்கள் மற்றும் இனிமேல் ஏற்படக் கூடிய காலி பணியிடங்களில் அவர்தம் முதுகலை ஆசிரியர் போட்டித் தேர்வில் தெரிவு செய்யப்படின் பணியமர்த்தப்படுவர்.

தேசிய தகுதி தேர்வு மற்றும் மாநில அளவிலான தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற 100 முதுகலை பட்டதாரி பார்வையற்றவர்களை தற்போது கல்லூரிகளில் உள்ள பின்னடைவு காலி பணியிடங்கள் மற்றும் இனிமேல் வரும் காலி பணியிடங்களில் உதவிப் பேராசிரியர்களாக பணியமர்த்த ஆசிரியர் தேர்வு வாரியம் நடவடிக்கை எடுக்கும்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...