அலுவலகத்திற்கு நடந்தே செல்லும் மாவட்ட கலெக்டர்


பெட்ரோல், டீசல் பயன்பாட்டை குறைக்கும் சிக்கன நடவடிக்கையாக, பீகாரின் கைமுர்மாவட்ட கலெக்டர், அரவிந்த் குமார் சிங்,
அலுவலகத்திற்கும், தன் வீட்டிற்கும் நடந்தே சென்று வருகிறார்.

பீகார் மாநிலத்தின் கைமுர் மாவட்ட கலெக்டராக இருப்பவர் அரவிந்த் குமார் சிங். 2 கி.மீ., தூரத்தில் உள்ள தன் வீட்டிலிருந்து, தினமும் அலுவலகத்திற்கு நடந்தே வருகிறார்; அரசு வாகனங்களையோ, தன் சொந்த வாகனங்களையோ பயன்படுத்துவதில்லை.அது போல், மாநில அரசு அதிகாரிகள், தங்களின் வாகனங்களை தவிர்த்து, பஸ், ரயில் போன்ற பொது பயன்பாட்டு வாகனங்களில் பயணம் செய்ய அறிவுறுத்தியுள்ளார்.முடிந்த வகையில் எல்லாம், பெட்ரோல், டீசலை சிக்கனமாக பயன்படுத்துமாறு, அன்புடன் கேட்டுக்கொண்டுள்ள இவர், இதனால் நாட்டின் அன்னியச் செலாவணி இருப்பு அதிகரிப்பதுடன், பொருளாதாரமும் மேம்படும் என, வேண்டுகோள் விடுத்துள்ளார்.இவரைப் பார்த்து, மாவட்ட துணை போலீஸ் அதிகாரி, நிர்மலா குமாரியும், தன் வீட்டிலிருந்து அலுவலகத்திற்கு நடந்தே வருகிறார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...