இறந்தும் ஐந்து பேருக்கு வாழ்வு கொடுத்த வாலிபர்

வாகன விபத்தில் சிக்கி, மூளைச்சாவு அடைந்த வாலிபரின், நுரையீரல் மற்றும் கண்கள் உள்பட ஐந்து பாகங்கள் எடுக்கப்பட்டு, ஐந்து பேருக்கு
தானம் செய்யப்பட்டன.

கோவை, சரவணம்பட்டி, சிவானந்தபுரத்தை சேர்ந்தவர் மருதாசலம்; பெயின்டர். இவரது மனைவி கலா, மகன் ராஜகோபால், 25. பி.சி.ஏ., பட்டதாரி. சரவணம்பட்டி சாப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் இரவு, குனியமுத்தூரிலுள்ள தனது கல்லூரி நண்பர் மனோஜை அழைத்துக்கொண்டு, பைக்கில் (டிஎன் 38 பிகே 1858) எல் அண்ட் டி பைபாஸ் ரோட்டில் சென்றார். அங்குள்ள குறுக்கு பாதையில் செல்லும்போது, ரோட்டில் நின்றிருந்த பைக்(டிஎன் 22 சிடி 8559) மீது மோதினார்.இதில், நண்பர்கள் இருவர் உள்பட மூன்று பேர் காயமடைந்தனர். சத்தம் கேட்டு அப்பகுதியிலிருந்தோர் வந்து, இருவரையும் மீட்டு, சுந்தராபுரம் அபிராமி மருத்துவமனைக்கு அனுப்பினர். ரோட்டின் ஓரத்தில் பைக்கை நிறுத்தி மொபைல்போன் பேசிக்கொண்டிருந்த அருள் டேவிட் ராஜ், போத்தனூர் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

படுகாயமடைந்த நிலையில் அழைத்து வரப்பட்ட இருவருக்கும், டாக்டர் பாலமுருகன் தீவிர சிகிச்சையளித்தார். இருப்பினும் நேற்று காலை, ராஜகோபாலுக்கு, மூளைச்சாவு ஏற்பட்டது. இதுகுறித்து, அவரது பெற்றோர், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு, டாக்டர் பெரியசாமி தெரிவித்தார்.அப்போது, ராஜகோபாலின் தந்தை மருதாசலத்திடம், அவரது நண்பர்கள், " ராஜகோபால், தான் இறந்தால், உடலுறுப்புகளை தானம் செய்ய விரும்பியதாக,' கூறினர். இதையடுத்து, தனது மகனின் கடைசி ஆசையை நிறைவேற்றும் பொருட்டு, டாக்டரிடம் தெரிவித்தனர். அவர்களை பாராட்டிய டாக்டர் பெரியசாமி, உடனடியாக அதற்கான ஏற்பாடுகளை செய்தார்.அவரது மருத்துவமனையிலுள்ள டாக்டர் பாலசெந்தில் தலைமையிலான மருத்துவ குழுவினர், ராஜகோபாலை பரிசோதித்து, மூளைச்சாவு அடைந்ததை உறுதி செய்தனர்.

டாக்டர் பெரியசாமி கூறியதாவது:மூளைச்சாவு அடைந்த ராஜகோபாலின் நுரையீரல், சென்னை, குளோபல் மருத்துவமனைக்கும், கண்கள் கோவை, சங்கரா கண் மருத்துவமனைக்கும் தரப்படுகிறது. ஒரு சிறுநீரகம், இங்கு சிகிச்சை பெற்று வரும், சசிகலா என்பவருக்கும், மற்றொன்று, ராம் நகரிலுள்ள எஸ்.பி.டி., மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நூர்ஜஹான் என்பவருக்கும் பொருத்தப்படுகிறது. இதற்கு இரண்டரை மணி நேரம் ஆகும். நுரையீரலை பெற்றுச் செல்வதற்காக, தனி விமானத்தில் குளோபல் மருத்துவமனை டாக்டர்கள் வந்துள்ளனர். தனது மகன் இறந்தபோதும், மற்றவர்களை வாழ வைக்க முடிவு செய்த, அவரது பெற்றோர் மற்றும் அனைவருக்கும் நன்றி கூற வார்த்தைகள் கிடையாது.இவ்வாறு, அவர் கூறினார்.

ராஜகோபாலின் தந்தை மருதாசலம் கூறுகையில்,"" எனது மகன், நாங்கள் வசிக்கும் பகுதியிலுள்ள விவேகானந்தா இயக்கத்தில் உறுப்பினராக இருந்தான். ஏழு முறை, ரத்த தானம் செய்துள்ளான். "தான் இறந்தாலும் மற்றவர்கள் பயனடையும் வகையில், உடல் தானம் செய்ய வேண்டும்,' என, நண்பர்களிடம் கூறியுள்ளான். அவனது ஆசையை நிறைவேற்றுவதன் மூலம், எனது மகனை பயன்பெற்றவர்கள் மூலம் காண்பேன்,'' என்றார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...