இரண்டாவது பெற்றோர்: இன்று ஆசிரியர் தினம்-

மறைந்த முன்னாள் ஜனாதிபதி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப். 5ம் தேதி, இந்தியாவில் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. மாணவரின் வெற்றி, தோல்வியில், பெற்றோரை விட ஆசிரியர்களுக்கே
அதிக பங்கு உள்ளது. மாணவர்களை, சிறந்த மனிதராக மாற்றுவது ஆசிரியர் தான். வாழ்க்கை என்றால் என்ன, சமூகத்தில் மாணவரின் பங்கு ஆகியவற்றை ஆசிரியர்கள் தான் சொல்லித் தருகின்றனர்.

ஆசிரியரின் பழக்க வழக்கங்கள், அப்படியே மாணவரையும் தொற்றிக்கொள்ளும். ஆசிரியர் தங்களது, பொறுப்பை உணர்ந்து, மாணவர்களுக்கு உண்மையான வழிகாட்டியாக இருக்க வேண்டும். தன்னலமற்ற, தியாக மனப்பான்மை கொண்ட ஆசிரியரால் தான், சிறந்த மாணவ சமுதாயத்தை உருவாக்க முடியும்.

எப்படி வந்தது :

சிறந்த கல்வியாளராகவும், தத்துவ மேதையாகவும் திகழ்ந்த ராதாகிருஷ்ணன், 1962, மே 13ம் தேதி இந்தியாவின் இரண்டாவது ஜனாதிபதியாக பதவியேற்றார். அவரது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட வேண்டுமென அவரது மாணவர்கள் அனுமதி கேட்டனர். அதற்கு அவர், தனது பிறந்த நாளை ஆசிரியர் தினமாக கொண்டாடினால் பெருமை என கூறினார். ஆசிரியர் தொழிலில் இருந்த ஈடுபாடு காரணமாக, அவர் இவ்வாறு கூறினார். முன்னாள் ஜனாதிபதி கலாம், "சிறந்த ஆசிரியர் என்பவர், சிறப்பாக கற்பிப்பவர் மட்டுமல்ல, கற்பிக்கும் தொழிலை நேசிப்பவராக இருக்க வேண்டும்; அவரால் தான் மாணவரின் மனதில், நன்னெறிகளை வளர்க்க முடியும்' என்கிறார்.

சுய ஆர்வம் :

மற்ற பணிகளைப் போல, ஆசிரியர் பணி இருப்பதில்லை. இதில் பொறுமை, அர்ப்பணிப்பு, புதிய தகவல்களை கற்றுக்கொள்ளும் ஆர்வம் ஆகியவை இருந்தால் தான், தரமான கல்வியை அளிக்க முடியும். மாணவரைப் போல, ஆசிரியரும் அறிவை பெருக்கிக்கொள்ள தயங்கக் கூடாது.

இது வியாபாரம் அல்ல:

நாட்டில் கல்விக்கு தான் அரசு அதிக நிதி ஒதுக்குகிறது. இதன் பலன் மாணவர்களை சென்றடைகிறதா என்றால் சந்தேகமே. "14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்தை' முழுமையாக நிறைவேற்றினால், பள்ளி செல்லா குழந்தைகளே நாம் நாட்டில் இருக்க மாட்டார்கள். தற்போது தனியார் கல்வி நிறுவனங்கள் அதிகரித்து விட்டன. அவை கல்வி வழங்குவதை விட, கட்டணம் வசூலிப்பதில் தான், அதிக அக்கறை செலுத்துகின்றன. இதனால் ஏழை மக்களுக்கு தரமான கல்வி கிடைப்பது தடைபடுகிறது. கல்விக்கட்டணம் வரைமுறை படுத்த அரசு முன்வர வேண்டும்.

சிறந்த ஆசிரியர்:

ஆண்டுதோறும் ஆசிரியர் தினத்தன்று, கல்வித் துறையில் சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்களுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன. இவற்றை ஜனாதிபதியே வழங்கி கவுரவிக்கிறார். இது ஆசிரியர்களுக்கு கிடைக்கும் பெரிய கவுரவம்.
Click Here

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...