பொது தேர்வு நடத்த உயர்மட்டக்குழு

கடந்த ஆண்டு நடந்த பொதுத் தேர்வின் போது, ரயில், அஞ்சல் மூலம் கொண்டு செல்லப்பட்ட, விடைத்தாள்கள் தொலைந்தன. இதைத் தவிர்க்கும் வகையில், தேர்வுத் துறைத் தலைவர் தலைமையில், ஐந்து பேர் குழு e
அமைக்கப்பட்டு உள்ளது. பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வுகள், அரசுத் தேர்வுத் துறை மூலம் நடத்தப்பட்டு வந்தன. கடந்த ஆண்டு அஞ்சல், ரயில் மூலம் விடைத்தாள் கொண்டு சென்றபோது, தவற விட்டதால் பிரச்னை ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, உயர்மட்ட அளவில் ஆலோசனை நடத்தினர்.
இப்பணியைக் கண்காணிக்க, உயர்மட்டக் குழு அமைக்க தீர்மானிக்கப்பட்டது. இதில், தேர்வுத் துறை இயக்குனர், தலைவராகவும்; பள்ளிக் கல்வி, தொடக்கக் கல்வி, மெட்ரிக் பள்ளி மற்றும் ஆர்.எம்.எஸ்.ஏ., திட்ட இயக்குனர்கள், உறுப்பினராகவும் செயல்படுவர். இவர்களின் நேரடி கண்காணிப்பில், பொதுத் தேர்வுகளை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. வினாத்தாள் மையத்தின், தலைமை பாதுகாப்பு அதிகாரியாக, பள்ளிக் கல்வி இயக்குனர் செயல்படுவார். மாவட்ட அளவில், வினாத்தாள் பாதுகாப்பு மையத்தில் இருந்து, தேர்வு நடக்கும் மையத்திற்கு கொண்டு செல்லும் பணிக்கு, தனி அலுவலர் நியமிக்கப்படுவார். இதில், அனுபவம் வாய்ந்த முதுகலை ஆசிரியர்களுக்கு பயிற்சி கொடுக்கப்படும். முதன்மைத் தேர்வு கண்காணிப்பாளர், பறக்கும் படையினரை, உயர்மட்டக் குழுவே நியமனம் செய்யும்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...