தொப்புள்கொடி தானத்தை ஊக்கப்படுத்த ராமச்சந்திரா பல்கலைக்கழகம் ஒப்பந்தம்

"ஸ்டெம் செல்' மாற்று சிகிச்சைக்கு ஏதுவாக தொப்புள்கொடி ரத்த தானத்தை ஊக்குவிக்கவும், மகப்பேறு கால தாய் - சேய் மரணங்களை குறைப்பதற்கான விழிப்புணர்வு மற்றும் பயிற்சிகளை அளிக்கும்
வகையில், இரண்டு ஒப்பந்தங்களில் ராமச்சந்திரா பல்கலைக்கழகம் கையெழுத்திட்டுள்ளது. சென்னை ராமச்சந்திரா பல்கலையில் நடந்த நிகழ்ச்சியில், தொப்புள்கொடி ரத்த தான ஊக்குவித்தல் ஒப்பந்தத்தில், மருத்துவ மைய இயக்குனர் ரவி, ஜீவன் ஸ்டெம் செல் வங்கித் தலைவர் சீனிவாசன் கையெழுத்திட்டனர்.
தாய் - சேய் மரணத்தை குறைக்கும் விழிப்புணர்வுக்கான ஒப்பந்தத்தில், பல்கலை துணைவேந்தர் மூர்த்தியும், ஏகம் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் சாய்லட்சுமியும் கையெழுத்திட்டனர். வேந்தர் வெங்கடாசலம் முன்னிலையில், ஒப்பந்தங்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன. இந்த மருத்துவ மையத்தில், ஆண்டுக்கு, 5,000 குழந்தைகள் பிறக்கின்றன. அடுத்த மூன்று ஆண்டுகளில், ஜீவன் ஸ்டெம் செல் வங்கியோடு இணைந்து, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, அதிக அளவில் தொப்புள்கொடி ரத்தம் சேகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
தொப்புள்கொடி ரத்தம், குழந்தைகளுக்கு வரும், 80 சதவீத நோய்களைக் கட்டுப்படுத்த முடியும். இது தொடர்பாகவும், மகப்பேறு கால மரணங்களைக் குறைக்கும் வகையில் பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளவும் ஒப்பந்தங்கள் உதவும். நிகழ்ச்சியில், பேராசிரியர் பத்மநாபன் எழுதிய, செயற்கை பல் பொருத்தும் பாட புத்தகத்தையும், பேராசிரியர் மங்கத்தாயர் எழுதிய, "பார்மகோகாக்னாஸி - ஒரு இந்திய அணுகுமுறை' என்ற புத்தகங்களையும், வேந்தர் வெங்கடாசலம் வெளியிட்டார். பல்கலைக்கு பெருமை சேர்க்கும் வகையில் பணிபுரிந்தோரை பாராட்டினார். தலைமை ஆலோசகர் பார்த்தசாரதி, பல் மருத்துவக் கல்லூரி முதல்வர் கந்தசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...