மாணவி இறந்த விவகாரம்: மதுரை "விகாசா' பள்ளிக்கு மாநகராட்சி நோட்டீஸ்

: மதுரையில், காய்ச்சலால் மாணவி இறந்த விவகாரத்தில், அவர் படித்த "விகாசா' பள்ளிக்கு, மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மதுரை மாநகராட்சி பகுதிகளில், "டெங்கு' காய்ச்சலால்
பாதிக்கப்பட்டவர்கள் குறித்து அறிய, வார்டு வாரியாக அறிவுறுத்தப்பட்டது. அதில், கடந்த மார்ச் முதல் ஆக., வரை, 18 பேர் "டெங்கு' காய்ச்சலாலும்; 60 பேர், சந்தேகிக்கும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்றுள்ளனர். டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் பட்டியலில் வருவோரில், மூன்று பேர், மதுரை "விகாசா' பள்ளியின் மாணவிகள் என்பது தெரிந்தது. இதைத் தொடர்ந்து, மாநகராட்சி முதன்மை நகர்நல அலுவலர் டாக்டர் யசோதா தலைமையிலான குழு, நான்கு நாட்கள், பள்ளியில் ஆய்வு மேற்கொண்டது. பள்ளியில், நான்கு இடங்களில் கொசு உற்பத்திக்கான அறிகுறிகள், கண்டுபிடிக்கப்பட்டன. அவற்றை ஒழுங்குபடுத்துமாறு, பள்ளி நிர்வாகத்திடம் தெரிவித்து உள்ளனர்.

இந்நிலையில், அப்பள்ளியில் படித்த 14 வயது மாணவி ஒருவர், காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, நேற்று முன்தினம் இரவு இறந்தார். ஏற்கனவே மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையிலும், இறந்த மாணவியின் பெற்றோர் கொடுத்த தகவலின் படியும், பொது சுகாதாரச் சட்டத்தின் படி, பள்ளி நிர்வாகத்திற்கு, மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பிஉள்ளது. இது குறித்து, நகர்நல அலுவலர் டாக்டர் யசோதாவிடம் கேட்ட போது, ""விகாசா பள்ளியில், சில நாட்களுக்கு முன், ஆய்வு மேற்கொண்டாம். கொசு ஒழிப்பு இயந்திரங்கள், அவர்களிடம் உள்ளது. இருந்தும், சில இடங்களில் கொசு உற்பத்தி இருப்பதை சுட்டிக்காட்டினோம். மாணவி ஒருவர் இறந்திருப்பதால், குறைபாடுகளை சுட்டிக்காட்டி, நோட்டீஸ் அனுப்பி உள்ளோம்,'' என்றார்.

"விகாசா' பள்ளித் தாளாளர் என். பிஜூ சுதர்சன் கூறியதாவது:எங்கள் பள்ளியில், கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து, கொசுமருந்து தெளித்து வருகிறோம். வளாகத்தில், கொசுக்கள் உற்பத்தியாவதற்கு வாய்ப்பில்லை; பள்ளியைச் சுற்றியுள்ள பிற பகுதிகளில், கொசுக்கள் பரவுவதற்கு வாய்ப்பு இருக்கலாம், என்றார்.

அனைத்து பள்ளிகளை அழைத்து சிறப்பு கூட்டம்:

மாணவி இறந்த சம்பவத்தைத் தொடர்ந்து, பள்ளிகளில் "டெங்கு' விழிப்புணர்வு ஏற்படுத்த, மாநகராட்சி முடிவு செய்துள்ளது. அதற்காக, இன்று மதியம் 3 மணி முதல், 5 மணி வரை, மாநகராட்சி அலுவலகத்தில் சிறப்பு கூட்டத்திற்கு, ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில், மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பள்ளிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 66 மாநகராட்சி பள்ளிகளை தவிர்த்து, பிற 131 பள்ளிகளின் நிர்வாகத்தினர் பங்கேற்க, அறிவுறுத்தப்பட்டுள்ளது.


SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...