பிரசவத்திற்கு பின் அதிகரிக்கும் உடல் எடையை குறைக்க சில டிப்ஸ்..-SSTA-வாரம் ஒருஉடல்நலத்தகவல்

யோகாவை முயற்சிக்கவும் கடுமையான உடற்பயிற்சிகளை செய்தால் மட்டும் தான் உடல் எடை குறையும் என்று நினைக்க வேண்டாம். ஏனெனில் யோகா செய்வதால், மனம் புத்துணர்ச்சி
அடையவதோடு, ரிலாக்ஸ் ஆகவும் மாறும். மேலும் யோகா செய்வதால், மன அழுத்தம் மற்றும் சோர்வு நீங்குவதோடு, உடலின் செயல்பாடுகள் முறையாக நடந்து, உடல் எடை குறையவும் உதவியாக இருக்கும்.

பொறுமையாக மற்றும் நிதானமாக எடையை குறைக்கவும் பிரசவத்திற்கு பின்னர் வேகமாக உடல் எடை குறைய வேண்டும் என்று எதிர்பார்க்க வேண்டாம். ஏனெனில் ஏற்கனவே பிரசவத்தின் போது நிறைய சத்துக்கள் உடலில் இருந்து வெளியேறி இருப்பதால், போதிய சத்துக்களை உட்கொண்டு, பொறுமையாக எடையை குறைக்க வேண்டும். அதற்கு பின்வரும் டயட்டுகளை மேற்கொள்ளுங்கள்.
தண்ணீர் குடிக்கவும் உடல் எடையை குறைக்க நினைக்கும் போது செய்ய வேண்டிய செயல்களில் முக்கியமானவை தண்ணீரை அதிகம் குடிப்பது தான். இதனால், உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறி, உடல் வறட்சி தடுக்கப்பட்டு, நோயெதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கப்படும்.

நல்ல கொழுப்புக்கள் உட்கொள்ளவும் நல்ல கொழுப்புக்களான மோனோ மற்றும் பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொள்ள வேண்டும். அதிலும் அவகேடோ, ஆலிவ் ஆயில், சால்மன் மீன் மற்றும் ஆளி விதைகள் போன்றவை குறிப்பிடத்தக்கவை.
பசலைக் கீரை பச்சை இலைக் காய்கறிகளில் ஒன்றான பசலைக் கீரையை பிரசவத்திற்கு பின் பெண்கள் சாப்பிட்டால், உடலுக்கு வேண்டிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் கிடைப்பதோடு, உடல் எடை அதிகரிக்காமலும் தடுக்கும்.

பால் தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் நிச்சயம் இரும்புச்சத்து மற்றும் கால்சியம் நிறைந்த உணவுகளான பால் பொருட்களை அதிகம் சாப்பிட வேண்டும். அதிலும் பிரசவத்திற்கு பின்னர் பெண்கள் பாலை அதிகம் பருக வேண்டும். குறிப்பாக ஸ்கிம்ட் மில்க் குடித்தால், எடை குறைவதோடு, உடலுக்கு கால்சியம்

எலுமிச்சை எலுமிச்சை உடல் எடையை குறைக்க மட்டுமின்றி, உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றவும் உதவியாக இருக்கும். அதற்கு வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாற்றினை கலந்து, தேன் சேர்த்து வெறும் வயிற்றில் காலையில் குடித்தால், உடலில் தங்கியுள்ள கொழுப்புக்கள் அனைத்தும் கரைத்துவிடும்.

பெர்ரிப் பழங்கள் பெர்ரிப் பழங்களில், உடல் எடையை குறைக்க உதவும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் உள்ளது. ஆகவே பிரசவத்திற்கு பின்னர், உடல் எடையை குறைக்க நினைப்போர் பெர்ரிப் பழங்களை அதிகம் உட்கொள்ள வேண்டும்.

பிரசவத்திற்கு முன்பை விட, பிரசவத்திற்கு பின் தான் பெண்களின் உடல் எடையானது அளவில்லாமல் அதிகரிக்கும். அது நடிகையானானலும் சரி, சாதாரண பெண்ணானாலும் சரி, பிரசவம் முடிந்த பின்னர் உடல் பருமனடைந்துவிடுவார்கள். ஆகவே இவ்வாறு அளவுக்கு அதிகமாக உடல் எடை அதிகரிக்காமல் இருக்க வேண்டுமெனில், ஒருசிலவற்றை மட்டும் மனதில் கொண்டு நடந்தால் போதும். அதிலும் உடல் பருமன் அடையாமல் இருக்க, பிரசவத்திற்கு பின்னர் கடுமையான டயட்டை மேற்கொள்ளக்கூடாது. ஏனெனில் இந்த நேரத்தில் பெண்களின் உடலில் போதிய சத்துக்கள் இருக்காது. குறிப்பாக சிசேரியன் பிரசவம் நடந்தவர்கள், குறைந்தது 2-3 வாரங்கள் ஓய்வு எடுக்க வேண்டும். ஏனெனில் தையல் ஆறுவதற்கு சிறிது நாட்கள் ஆகும். ஆகவே பிரசவத்திற்கு பின், உடல் எடையை குறைப்பதற்கு முன், மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும். இப்போது பிரசவத்திற்கு பின் ஆரோக்கியமான முறையில் உடல் எடையை குறைக்க, கீழ்கூறிய சிலவற்றை பின்பற்றுங்கள். இதனால் நிச்சயம் உடல் எடை குறைந்து, பிரசவத்திற்கு பின்னும் சிக்கென்று அழகாக இருக்கலாம்.


SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...