ஆங்கில ஆசிரியர்களுக்கு பெங்களூருவில் ஒரு மாதம் பயிற்சி

நவம்பர் 6 முதல் டிசம்பர் 6 முடிய ஒரு மாத காலம் ஆங்கிலப்பாடப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பெங்களூருவில் உள்ள ஆங்கிலப் பயிற்சி நிறுவனத்தில் "ஆங்கிலம் கற்பித்தலில் புதிய அணுகுமுறைகள்-சான்றிதழ்" என்ற பயிற்சி நடத்த அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்திற்கு மூன்று ஆசிரியர்கள் வீதம் தெரிவு செய்து பெயர், முகவரி, அலைபேசி எண் உள்ளிட்ட விவரங்களைப் பட்டியலிட்டு அனுப்புமாறு முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டதையடுத்து, நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆங்கிலப் பட்டதாரி ஆசிரியர்கள் முன்னுரிமையளித்துப் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். சார்ந்த ஆசிரியர்களுக்கு உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் மூலமாக இதற்கான ஆணை வழங்கப்பட்டுள்ளது.

பொதுவாகவே பெங்களூரு மையப் பயிற்சிகள் மிகவும் பயனுள்ளவையாக இருந்தாலும் சனி, ஞாயிறு, அரசு விடுமுறை, விழாக்கால விடுமுறை போன்ற எதையும் கணக்கில் கொள்ளாமல் தொடர்ச்சியாக 30 நாட்கள் நடத்தப்படும் என்பதால் ஆசிரியர்கள் இப்பயிற்சியில் கலந்து கொள்ளச் சுணக்கம் காட்டுவர்.

செய்முறை ஒப்படைவுகள், செயல்திட்டங்கள், கருத்தரங்கு, குழுப்பணிகள் போன்ற அம்சங்கள் உள்ள இப்பயிற்சிகளின் போது பல்வேறு மாநில ஆசிரியர்களுடன் பழக வாய்ப்பு ஏற்படும்.

பயிற்சிப் படியோ பயணப்படியோ வழங்கப்படுவதில்லை. பயிற்சி நிறைவின்போது சான்றிதழ் வழங்கப்படும். தங்குமிடம் மற்றும் உணவு நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்படும்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...