குறைந்த ஊதியம்: செப்டம்பர் 2-ல் ஸ்டிரைக்!

போதிய ஊதிய உயர்வு அறிவிக்கப்படாததால் இந்திய தொழிற்கூட்டமைப்பினர் செப்டம்பர் 2ஆம்தேதி நாடு தழுவிய அளவில் வேலைநிறுத்தம் செய்வதாக அறிவித்துள்ளனர்.

இந்தியாவின் விவசாயம் சாராத அடித்தட்டு மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும்திட்டத்தில், அவர்களுக்கான
குறைந்தபட்ச ஊதியமாக நாள் ஒன்றுக்கு ரூ.350 என்றளவில் வழங்கப்படுவதாக நேற்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி அறிவித்திருந்தார். இது, 42 சதவிகித உயர்வு என்றபோதிலும், அனைத்திந்திய தொழிற்கூட்டமைப்பு இந்த ஊதிய உயர்வு தங்களுக்குப் போதுமானதாக இருக்காது என்று தெரிவித்து வேலைநிறுத்தப்போராட்டம் நடத்த முடிவுசெய்தனர். எனவே, செப்டம்பர் 2ஆம் தேதி நாடு தழுவிய அளவில் வேலைநிறுத்தம் செய்வதாக தற்போது அறிவித்துள்ளனர்.

7ஆவது ஊதியக் கமிஷன் பரிந்துரைகளின்கீழ் ஊதிய உயர்வுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தநிலையில், மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி இந்த 42 சதவிகித ஊதியஉயர்வை அறிவித்திருந்தார். இது மாதத்துக்கு (26 நாட்கள்) 9,100 ரூபாய் என்றபோதிலும்,தொழிற்கூட்டமைப்பு மாதத்துக்கு ரூ.18,000 ஊதியம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தனர். எனவே, நேற்று அறிவித்த ஊதிய உயர்வு மிகவும் குறைவாக இருப்பதாக போராட்டம் நடத்த முடிவுசெய்துள்ளனர். ஏற்கனவே, அனைத்திந்திய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு மற்றும் கோல் இந்திய ஊழியர்கள் செப்டம்பர் 2ஆம் தேதி வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...