மத்திய அரசின் கூலி உயர்வு நிராகரிப்பு திட்டமிட்டபடி 2–ந் தேதி வேலை நிறுத்தம் தொழிற்சங்கங்கள் அறிவிப்பு*

தொழிலாளர்களின் குறைந்தபட்ச தினக்கூலியை ரூ.350 ஆக  உயர்த்தி மத்திய அரசு அறிவித்துள்ளது.

இது 42 சதவீத கூலி உயர்வு ஆகும். ஆனால் இதை தொழிற்சங்கங்கள் ஏற்காமல், நிராகரித்து விட்டன.


இதுபற்றி ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கத்தின் பொதுச்செயலாளர் குருதாஸ் தாஸ்குப்தா, டெல்லியில் நேற்று கருத்து தெரிவிக்கையில், ‘‘மத்திய அரசின் குறைந்தபட்ச தினக்கூலி உயர்வு முற்றிலும் போதாது. வேலை நிறுத்த அறிவிப்பு அப்படியே இருக்கிறது. குறைந்தபட்ச (உலகளாவிய) கூலி நிர்ணய சட்டம் இயற்ற வேண்டும் என்பதுதான் எங்களின் கோரிக்கை’’ என கூறினார்.

பிற தொழிற்சங்கங்களும் இதையே கூறுகின்றன.

எனவே தொழிற்சங்கங்கள் 2–ந் தேதி (நாளை மறுதினம்) திட்டமிட்டபடி வேலை நிறுத்தம் செய்வது உறுதியாகி உள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...