4ஆண்டுகளில் மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் மாணவ–மாணவிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது !

*4ஆண்டுகளில் மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் மாணவ–மாணவிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது ஆய்வு முடிவில் தகவல்*

மும்பை,மும்பை மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் மாணவ– மாணவிகள் எண்ணிக்கை கடந்த 4 ஆண்டுகளில் அதிகளவில் குறைந்து இருப்பதாக ஆய்வு முடிவில்
தெரியவந்துள்ளது.காசநோய்

மும்பையை சேர்ந்த ஒரு தனியார் தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்று சுகாதாரம், கல்வி என அனைத்து மாநகராட்சி நடவடிக்கைகளையும் ஆய்வு செய்து அறிக்கையாக வெளியிடுவது வழக்கம். இந்த தன்னார்வ தொண்டு நிறுவனம் நேற்று மும்பை மாநகராட்சியின் கடந்த 4 ஆண்டுக்கான அறிக்கையை தாக்கல் செய்தது. இந்த அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:–மும்பையில் கடந்த ஏப்ரல் 2012 முதல் மார்ச் 2016 வரைக்கும் காசநோயால் 25 ஆயிரத்து 067 பேர்கள் பலியாகி உள்ளனர். மேலும் டெங்கு காய்ச்சலால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை 213 சதவீதம் அதிகரித்துள்ளது.கல்வி

மும்பையில் உள்ள மாநகராட்சி பள்ளியில் கடந்த 2010–2011–ல் மொத்தம் 4 லட்சத்து 37 ஆயிரத்து 683 மாணவ, மாணவிகள் படித்து வந்தார்கள். பின்னர் 2014–2015–ல் இந்த எண்ணிக்கை 3 லட்சத்து 97 ஆயிரத்து 85 ஆக குறைந்துள்ளது. இதன்மூலம் கடந்த 4 ஆண்டுகளில் மாநகராட்சி பள்ளியில் படிப்பவர்களின் எண்ணிக்கை 40 ஆயிரத்து 598 குறைந்துள்ளது.இதேபோல் கடந்த 4 ஆண்டுகளில் மாநகராட்சி கூட்டத்தில் பல்வேறு பிரச்சினைகளை குறித்து விவாதம் செய்த கவுன்சிலர்கள் பட்டியலில், சந்தோஷ் துரி, ஹேமாங்கி சபூர்கர், பிரஜக்தா விஷ்வாஸ்ராவ் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.வழக்குகள்

மும்பை போலீஸ் நிலையங்களில் மும்பை மாநகராட்சி கவுன்சிலர்களில் 24 சதவீதம் பேர் மீது வழக்கு உள்ளது. இதில் கடந்த மாநகராட்சி தேர்தல் முன்பு 29 பேர்கள் மீது வழக்குகள் பதிவாகி உள்ளது. தேர்தல் பின்னர் கடந்த டிசம்பர் 2015 வரையில் 28 கவுன்சிலர்கள் மீது வழக்குகள் பதிவாகியுள்ளது. இதில் 38 கவுன்சிலர்கள் மீது குற்றப்பத்திரிகை கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.கட்சிகளை பொறுத்தமட்டில் சிவசேனா சட்சியை சேர்ந்த 11 மீது வழக்கு பதிவாகியுள்ளது. இதேபோல் நவநிர்மான் சேனாவை 11 பேர் மீதும், காங்கிரசை சேர்ந்த 9 பேர் மீதும், பா.ஜனதாவை சேர்ந்த 6 பேர் மீதும், தே.காங்கிரசை சேர்ந்த 2 பேர் மீது, சமாஜ்வாடியை 1 மீதும், இதரகட்சிகளை சேர்ந்த 7 பேர் மீதும் வழக்கு பதிவாகி உள்ளது.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...