பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள், 5,000 பேருக்கு, நவீன ஒளிரும் மடக்குகுச்சிகள் வழங்கப்படும்,''

பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள், 5,000 பேருக்கு, நவீன ஒளிரும் மடக்குகுச்சிகள் வழங்கப்படும்,'' என, முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.சட்டசபையில், 110 விதியில், அவர் வெளியிட்ட அறிவிப்புகள்:

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை:


● பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள், 5,000 பேருக்கு, நவீன ஒளிரும் மடக்குகுச்சிகள் வழங்கப்படும்
●காது கேளாத குழந்தைகள், சென்னை மற்றும் சிவகங்கை மாவட்டத்தில், அதிக அளவில் உள்ளனர். இந்த மாவட்டங்களில், குழந்தை பிறந்தவுடனே செய்யப்படக் கூடிய, ஒரு சிறப்பு பரிசோதனை திட்டம் செயல்படுத்தப்படும்
● மூளை முடக்குவாதம், நுண்ணறிவுத் திறன், மரபுவழி குறைபாட்டினால் பாதிக்கப்பட்ட, குழந்தைகளின் பேச்சு மற்றும் மொழித்திறனை மேம்படுத்தும் வகையில் மாற்று தகவல் பரிமாற்ற முறை செயல்படுத்தப்படும்இத்தகைய சிறப்பு குழந்தைகள், படங்கள் மற்றும் இதர மாறுபட்ட முறைகளில், மற்றவர்களுடன் கலந்துரையாட பயிற்சி அளிக்கப்படும்.

இத்திட்டத்தில் தொடு திரையுடன், 'ஆவாஸ்' என்ற சிறப்பு மென்பொருளுடன், 'ஐ - பேடு' மூலம் சிறப்பு குழந்தைகளிடம் உள்ள, தகவல் பரிமாற்ற குறைபாடு களையப்படும்முதல் கட்டமாக, இந்த சிறப்பு வசதிகள், ஒரு கோடி ரூபாய் செலவில், ஆரம்ப நிலை பயிற்சி மையங்கள், நடமாடும் சிகிச்சைப் பிரிவுகள் மற்றும் சிறப்பு பள்ளிகளில் படிக்கும், 145 குழந்தைகளுக்கு வழங்கப்படும்.இவ்வாறுமுதல்வர் அறிவித்தார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...