நெடுஞ்சாலை திட்டங்களுக்கு ரூ.7,457 கோடி !

இந்தியாவின் 11 மாநிலங்களுக்கு ரூ.7,457 கோடி மதிப்பிலான தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கும் திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

சாலை சீரமைப்புப் பணிகளுக்காக மத்திய அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறது. சமீபத்தில், 6 மாநிலங்களில் தேசிய
நெடுஞ்சாலைகள் அமைக்க சுமார் ரூ.6,000 கோடி ஒதுக்கீடு செய்தது. இந்நிலையில், தற்போது மத்திய அரசு ரூ.7,457 கோடி செலவில் 11 மாநிலங்களில் 16 தேசிய நெடுஞ்சாலை திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. இதுகுறித்து சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை செயலாளர் சஞ்சய் மித்ரா கூறுகையில், ரூ.7,457 கோடி செலவில் 622 கிலோ மீட்டர் தூர அளவில் 16 நெடுஞ்சாலை திட்டங்களுக்கு நிதிக்குழு ஒப்புதல் வழங்கியுள்ளது என்றார்.

மகாராஷ்டிரா, ஒடிஷா, மேற்கு வங்காளம், ஆந்திரப்பிரதேசம், குஜராத், ஹரியானா, உத்தரகாண்ட், அருணாச்சலபிரதேசம், அசாம், சிக்கிம், சத்தீஸ்கர் ஆகிய 11 மாநிலங்களில் இந்த நெடுஞ்சாலைத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...