மலைக் கிராமங்களில் பள்ளிகளில் ஆசிரியர்கள் செல்லவில்லையா ???

மலைக் கிராமங்களில் அமைந்துள்ள பள்ளிக்கு ஆசிரியர்களும், தலைமை ஆசிரியர்களும் சரிவர செல்வதில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.மலைக் கிராமங்களில் உள்ள மலைவாழ் மக்களுடைய பிள்ளைகள் கல்வி கற்க நீண்ட தொலைவு செல்ல வேண்டியிருந்த காரணத்தால் அவர்கள் தங்களுடைய பிள்ளைகளை
பள்ளிகளுக்கு அனுப்பாமல், வேலைக்கு அனுப்பச் செய்த காலம் இருந்தது. ஆனால் அவர்களது நலன் கருதி மலைக் கிராமங்களிலேயே பள்ளிகளை அரசாங்கம் தொடங்கியது.

 அவர்களுக்குத் தேவையான கல்வி அவர்களுடைய வசிப்பிடத்துக்கு அருகிலேயே கிடைக்க ஆவன செய்யப்பட்டது.அதனால் தற்போது பெரும்பாலான மலைக் கிராமங்களிலேயே அரசுத் தொடக்க, நடுநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகள் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.எனினும் அங்கு பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களின் பணி பாராட்டுக்குரியதாக இல்லை. ஏனெனில் வேலூர் மாவட்டத்தில் மலைக் கிராம பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களும், தலைமை ஆசிரியர்களும் சரிவர பள்ளிக்குச் செல்வதில்லை என்ற குற்றச்சாட்டு பல காலமாக இருந்து வருகிறது.காலையில் பணிக்குச் சென்று வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட்டுவிட்டு சிறிது நேரத்தில் புறப்பட்டுச் சென்று விடுகின்றனர் எனவும், தங்களுடைய தனிப்பட்ட பணியைபார்க்கச் சென்றுவிடுகின்றனர் எனவும் கூறப்படுகிறது. அதனால் மாணவர்களுக்கு கிடைக்க வேண்டிய கல்வி சரிவர கிடைப்பதில்லை. தலைமை ஆசிரியர்கள் வீட்டுக்குச் சென்றுவிட்டால், சில ஆசிரியர்கள் அல்லது சத்துணவு அமைப்பாளர்களே பள்ளியைப் பார்த்துக் கொள்வதாகவும் தெரிகிறது.பொதுவாக அரசுப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு அரசு சம்பளம் திருப்திகரமாக வழங்கப்படுகிறது.

இதில் மலைக் கிராமங்களில் பணிபுரிவதற்கான கூடுதல் சிறப்புப் படி வேறு வழங்கப்படுகிறது. இவ்வாறான சூழ்நிலையிலும் அவர்களுக்கு பணி செய்ய ஆர்வமும், ஈடுபாடும் இல்லை.அதே நேரத்தில் கல்வியியல் கல்லூரி மற்றும் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் படிக்கும் பயிற்சி ஆசிரியர்கள் பயிற்சிக்காக இறுதி ஆண்டில் பல்வேறு பள்ளிகளுக்கு அனுப்பப்படுகின்றனர். இவ்வாறான நிலையில் மலைக் கிராம பள்ளிகளுக்கு பயிற்சி ஆசிரியர்கள் செல்லும்போது, அவர்களிடம் பள்ளியை முழுமையாக ஒப்படைத்துவிட்டு ஆசிரியர்களும், தலைமை ஆசிரியர்களும் தங்களது பணியைப் பார்க்க கிளம்பி விடுகின்றனர் என்ற குற்றச்சாட்டு உள்ளது. பயிற்சி பெற வரும் தங்களிடம் பள்ளியை ஒப்படைத்தால் எப்படி என பயிற்சி ஆசிரியர்கள் வருத்தத்துடன் கூறுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.சில ஆசிரியர் பயிற்சி பள்ளி, கல்வியியல் கல்லூரிகளை மலைக் கிராமத்தைச் சேர்ந்த ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் தொடர்பு கொண்டு கூடுதலாக பயிற்சி ஆசிரியர்களை அனுப்புமாறு கேட்பதாகவும் தகவல் வெளியாகிறது.மலைக் கிராமங்களில் உள்ள பள்ளிகளுக்கு கல்வித் துறை அதிகாரிகள் சரியான முறையில் மேற்பார்வை செய்ய முடிவதில்லை.

மலைக் கிராமங்களுக்குச் செல்ல போதுமான போக்குவரத்து வசதி இல்லதாததால் ஆய்வுக்கு செல்ல முடிவதில்லை. இதனை சாதகமாகப் பயன்படுத்தி தங்களது பணியைஆசிரியர்கள் சரிவர செய்வதில்லை.ஆகவே வேலூர் மாவட்டத்தில் உள்ள மலைக் கிராம பள்ளிகளுக்கு கல்வித் துறை அதிகாரிகள் குறிப்பிட்ட கால இடைவெளியில் அடிக்கடி ஆய்வு செய்ய வேண்டும்.    தவறு செய்திருப்பது தெரியவந்தால் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...