பாதுகாப்பு இல்லாத வைஃபை!

தூங்குகிற நேரத்தைத் தவிர, மற்ற எல்லா நேரங்களிலும் செல்போன் இல்லாமல் இருக்க முடியாது. அந்தளவுக்கு மொபைல் நமது அத்தியாவசியத் தேவைகளில் ஒன்றாகிவிட்டது. இந்த மொபைல் பயன்பாட்டின் தேவை கருதி, பொது இடங்களிலும் வைஃபை வசதியை
செய்து கொடுக்கிறது அரசும் சில தனியார் நிறுவனங்களும்.

இப்படி, பொது இடங்களில் வைஃபை மூலம் இண்டர்நெட் பயன்படுத்தி செல்போனில் தன்னுடைய சொந்த ரகசியங்களைப் பகிரும்போது, அந்த தகவல்கள் அனைத்தும் திருடப்படுவதாகக் கூறுகிறது ஆய்வு ஒன்று. புதுடல்லியில் The 'Digital Detox: Unplugging on Vacation' என்ற தலைப்பை முன்வைத்து இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வில், இந்தியர்களில் 37% பேர் முகநூல், வாட்ஸ் அப் போன்ற சமூக வலைதளங்களைப் பயன்படுத்துகிறார்கள். 54% பேர் செல்போன் பயன்படுத்துகிறவர்களாக இருக்கிறார்கள்.

குறிப்பாக, வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்லும் பயணிகளில் பொது இடங்களிலுள்ள வைஃபை வசதியைப் பயன்படுத்தி, சமூக வலைதளங்களில் அந்தரங்கத் தகவல்களை பகிர்வதில் முன்னணியில் இருப்பவர்கள் இந்தியர்கள் என்கிறது அந்த ஆய்வு. சைஃபர் தாக்குதல் எனப்படும் தகவல் திருட்டுக்கு அதிகம் ஆளாவதும் இந்தியர்கள்தான்.

செல்போனில் இன்டர்நெட் பேக் போட்டு பயன்படுத்துவது அல்லாமல், பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள வைஃபை மூலம் தகவல்களை பரிமாறிக்கொள்வது பாதுகாப்பானது அன்று. இதில் புகைப்படங்கள், முக்கியமான தகவல்கள் வெளியிடும்போது சைஃபர் குற்றவாளிகள் அதை திருடுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாகவே இருக்கிறது. அதிலும் முக்கியமாக, பொது இடங்களில் உள்ள வைஃபை மூலமாக பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்வதென்பது மிகவும் ஆபத்தானது.

சொந்த அல்லது வேலை நிமித்தமாக வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்லும் இந்தியர்கள் 3.6% பேர், பொது இடங்களில் உள்ள வைஃபையை பயன்படுத்துகின்றனர் என்று ஆய்வு கூறுகிறது. இந்த ஆய்வின் முக்கிய நோக்கமே, இணையத்தைப் பயன்படுத்தும் இந்தியர்களின் எச்சரிக்கை உணர்வைத் தூண்டுவதுதான். கவனத்தோடுதான் வைஃபையை பயன்படுத்த வேண்டும்போல!

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...