மாணவர்களுக்காக சிறப்பு திட்டம்; மாநகராட்சி, ’அறம்’ கைகோர்ப்பு*

*மாணவர்களுக்காக சிறப்பு திட்டம்; மாநகராட்சி, ’அறம்’ கைகோர்ப்பு*

கோவை: கோவை மாநகராட்சி மற்றும் &'அறம் பவுண்டேஷன் சாரிடபிள் டிரஸ்ட்&' இணைந்து, மாநகராட்சி பள்ளி மாணவர் களுக்காக நான்கு திட்டங்களை தீட்டியுள்ளன.


இதன்படி, வெற்றி பள்ளி திட்டம், சந்தோஷ மான குழந்தை பருவம், பாதுகாப்பான தொடுதல் பற்றிய விழிப்புணர்வு, மேல்நிலை மாணவியருக்கு தற்காப்பு பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது; மாநகராட்சி கமிஷனர் விஜயகார்த்திகேயன், துவக்கி வைத்தார்.

அறம் பவுண்டேஷன் சாரிடபிள் டிரஸ்ட் நிர்வாக அறங்காவலர் லதா கூறியதாவது:

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு வார இறுதியிலும், பள்ளி நாட்களில் மாலை நேரத்திலும் வீடியோ மூலம் பாடம் நடத்தப்படும். கையெழுத்து, பதிலளிக்கும் முறை, தேர்வு நேர நடுக்கத்தை தவிர்க்க ஊக்கம், மன அழுத்தத்தை தவிர்ப்பது குறித்தும், ஆண்டுக்கு இருமுறை உளவியல் பயிற்சியும் அளிக்கப்படும்.

பொறுப்பான பிரஜையை உருவாக்கும் விதமாக, குழந்தைகளுக்கு நற்பண்புகள் கற்றுத்தரப்படும். கோபத்தை கட்டுப்படுத்துவது; பிறரை மன்னிப்பது; உதவுவது; சுகாதாரம், இலக்கு நிர்ணயிப்பது; நேர்மறை எண்ணங்கள் தொடர்பாக வகுப்பு நடத்தப்படும். 43 பள்ளிகளில், 10 ஆயிரத்து, 500 மாணவ - மாணவியர் பயன்பெறுவர்.

சுய மதிப்பீடு கையேடு வழங்கப்படும்; சிறப்பு மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். பாதுகாப்பான தொடுதல் பற்றிய விழிப்புணர்வில், 9,000 மாணவியர் பயன்பெறுவர். பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவியருக்கு, 12 விதமான தற்காப்பு பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...