பணி மாறுதல் கலந்தாய்வில் பங்கேற்க வந்த இடைநிலை ஆசிரியர் சஸ்பெண்ட் !

பணி மாறுதல் கலந்தாய்வில் பங்கேற்க வந்த இடைநிலை ஆசிரியர், தொடக்கக் கல்வித்துறை அலுவலர்களுடன் தகராறில் ஈடுபட்டதால் ஞாயிற்றுக்கிழமை தாற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.


திண்டுக்கல் மாவட்ட தொடக்கக் கல்வித்துறையில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு நடைபெற்றது. மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் கூ.பாண்டியராஜா தலைமையில், முற்பகலில் ஒன்றியத்திற்குள்ளும், பிற்பகலில் ஒன்றியம் விட்டு ஒன்றியத்திற்கும் பணியிட மாறுதலுக்கான கலந்தாய்வு நடைபெற்றது.

இதில் ஒன்றியத்திற்குள் 43 பேர், ஒன்றியம் விட்டு ஒன்றியம் 24 பேர் என மொத்தம் 67 ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதலுக்கான ஆணை வழங்கப்பட்டது.

தகராறு செய்த ஆசிரியர் பணியிடை நீக்கம்: திண்டுக்கல் மாவட்டம், பழனி புறநகர் ஒன்றியத்திற்குள்பட்ட காவலப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆசிரியர் த.குணசேகரன், கலந்தாய்வில் பங்கேற்றார். அப்போது, கலந்தாய்வு பணியில் ஈடுபட்டிருந்த தொடக்கக் கல்வித்துறை அலுவலர்களுடன் தகராறு செய்ததாகவும், மிரட்டல் விடுத்ததாகவும் புகார் எழுந்தது.

இதனை அடுத்து, விதிமுறைகளை மீறி கலந்தாய்வு மையத்தில் தகராறு செய்த ஆசிரியர் த.குணசேகரனை தாற்காலிக பணியிடை நீக்கம் செய்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் கூ.பாண்டியராஜா உத்தரவிட்டுள்ளார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...