அர்பணிப்போடு ஆசிரியர்கள் பலர் இப்படியும் சிலர் ஆசிரியருக்கு மசாஜ் !

பொதுவாக, சில அரசுப் பள்ளிகளில் மாணவர்களை தங்களுடைய சொந்த வேலைகளுக்காக ஆசிரியர்கள் பயன்படுத்துகிறார்கள். வீடுகளுக்கு காய்கறி வாங்கச் சொல்வது, வீட்டு வேலைகளை மாணவர்களை வைத்து முடித்துக் கொள்வது என அரசுப் பள்ளி ஆசிரியர்களில் சிலர், மாணவர்களை தங்கள் வீட்டு
வேலைக்காரர்களைப்போல நடத்துகிறார்கள். அர்ப்பண உணர்வோடு ஆசிரியர் பணி செய்யும் பெரும்பாலான ஆசிரியர்களுக்கு மத்தியில், அவமானமாக இப்படி சில ஆசிரியர்களும் இருக்கிறார்கள். சத்தீஸ்கர் மாநிலத்தில் பத்தாம் வகுப்பு மாணவர்களை ஆங்கில ஆசிரியர், தன் உடம்பை அமுக்கிவிட்டு மசாஜ் பண்ணச் சொன்ன நிகழ்வு வீடியோவாகி வலைதளங்களில் வைரலாகி இருக்கிறது. ஆசிரியர் தரையில் படுத்திருக்கிறார். அவரைச்சுற்றி மூன்று மாணவர்கள் அவருக்கு கை, கால், முதுகு போன்ற பகுதியை இதமாகப் பிடித்துவிடுவது போல் வீடியோ வெளியாகியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தில், ராய்ப்பூர் அருகில் உள்ள ஜஸ்புர் என்ற இடத்தில் தும்லா அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இங்கே, அனுப் மின்ஜ் என்பவர் ஆங்கில ஆசிரியராகப் பணியாற்றி வந்தார். இந்நிலையில், பத்தாம் வகுப்பு படிக்கும் மூன்று மாணவர்கள் தங்களது விடைத்தாளை வாங்குவதற்கு ஆசிரியர்கள் அறைக்குச் சென்றபோது, அங்கு மாணவர்கள் மசாஜ் செய்துகொண்டிருக்க மொபைலை எடுத்து அதை வீடியோவாக்கி வைராலாக்கிவிட்டனர்.

இந்த நிகழ்வு தொடர்பான ஆசிரியர் கூறியதாவது: ‘அதிகமான காய்ச்சலாலும், உடம்பு வலியாலும் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தேன். அப்போது மாணவர்களாக முன்வந்து உடலை நாங்கள் பிடித்துவிடுகிறோம் என்று சொன்னார்கள்’ என்கிறார். பள்ளிக் கல்வித் துறையோ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக, பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் ‘ஆசிரியர்மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது, அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்’ என்றனர். இந்தச் சம்பவம் நடக்கும்போது, சக ஆசிரியர்களும் உடனிருந்தது குறிப்பிடத்தக்கது. வட மாநிலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்துவருவது குறிப்பிடத்தக்கது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...