ஆசிரியர்கள் இல்லாத உறைவிடப்பள்ளி*

உறைவிட பள்ளியில் ஆசிரியர்கள் இல்லாததால், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் குழந்தைகள், கல்வி பெற முடியாத நிலை தொடர்கிறது.

மலைப்பகுதியில், மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இன குழந்தைகள்
மேம்பாட்டுக்காக, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம், உறைவிடப்பள்ளிகள் செயல்படுகின்றன. இப்பள்ளிகளின் இன்றைய நிலை, பெரும் அவலத்தில் உள்ளது. ஈரோடு மாவட்டத்தில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ், 19 உறைவிட பள்ளிகள் உள்ளன.

இவற்றில், அரசால் உருவாக்கப்பட்ட பணியிடங்களில் பாதிக்கும் மேல், ஆசிரியர் பணியிடங்கள் காலியாகவே உள்ளன. குறிப்பாக, ஆசனூர் அருகே கெத்தேசால் உண்டு உறைவிடப்பள்ளியில் செயல்படும் தொடக்கப் பள்ளியில், 49 மாணவ, மாணவியர் படிக்கின்றனர்.

ஒன்று முதல், ஐந்தாம் வகுப்பு வரை, உள்ள ஐந்து வகுப்புக்கும் சேர்த்து, ஒரே ஆசிரியை தான் உள்ளார். அவரே, தலைமை ஆசிரியராகவும், வகுப்பு ஆசிரியராகவும், விடுதி காப்பாளராகவும் உள்ளார். இவர் விடுதிக்கு தேவையான பொருட்களை வாங்கவும், தலைமையிடத்து ஆய்வு கூட்டங்கள், கல்வி தொடர்பான ஆய்வுக்கூட்டம் போன்ற பல பணிகளுக்கு இவரே செல்வதால், வாரத்தில் இரண்டு நாளே பள்ளிக்கு வர முடிகிறது.

மீதமுள்ள நாளில், வகுப்புகள் நடப்பதில்லை. இதே நிலையில்தான் பல பள்ளிகள் உள்ளன. எனவே, மலைப்பகுதியில் வசிக்கும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இன குழந்தைகளின் எதிர்காலம் கருதி, 19 உறைவிட பள்ளிகளில் முழு அளவில் ஆசிரியர், தலைமை ஆசிரியர், விடுதி காப்பாளர் பணியிடங்களை அரசு நிரப்ப வேண்டும்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...