தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சரின் வியக்கதகு முன்னேற்றங்கள் !

சென்னை: தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதில் பால்வளத்துறை அமைச்சராக இருந்த சண்முகநாதன் பதவி பறிக்கப்பட்டது. அமைச்சரவையில் 'மாபா' பாண்டியராஜனுக்கு இடம் வழங்கப்பட்டுள்ளது.


தமிழக சட்டசபைக்கு கடந்த மே மாதம் தேர்தல் நடந்தது. அதன் பிறகு அமைச்சரவையில் சிறிது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.பால்வளத்துறை அமைச்சராக இருந்த எஸ்.பி.சண்முகநாதன் விடுவிக்கப்பட்டார். அவர் வகித்த இலாகா ராஜேந்திர பாலாஜியிடம் கூடுதலாக ஒப்படைக்கப்பட்டது.
பெஞ்சமினிடம் இருந்த பள்ளிக்கல்வித்துறை பறிக்கப்பட்டு, கே.பாண்டியராஜனிடமும், பெஞ்சமினுக்கு ஊரக வளர்ச்சித்துறையும் வழங்கப்பட்டது. இவர்களுக்கு நாளை நடக்க உள்ள விழாவில் கவர்னர் ரோசையா பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்[30/08 6:12 am] ‭Virendraprabu salem‬: சென்னை: தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதில் பால்வளத்துறை அமைச்சராக இருந்த சண்முகநாதன் பதவி பறிக்கப்பட்டது. அமைச்சரவையில் 'மாபா' பாண்டியராஜனுக்கு இடம் வழங்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டசபைக்கு கடந்த மே மாதம் தேர்தல் நடந்தது. அதன் பிறகு அமைச்சரவையில் சிறிது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.பால்வளத்துறை அமைச்சராக இருந்த எஸ்.பி.சண்முகநாதன் விடுவிக்கப்பட்டார். அவர் வகித்த இலாகா ராஜேந்திர பாலாஜியிடம் கூடுதலாக ஒப்படைக்கப்பட்டது.
பெஞ்சமினிடம் இருந்த பள்ளிக்கல்வித்துறை பறிக்கப்பட்டு, கே.பாண்டியராஜனிடமும், பெஞ்சமினுக்கு ஊரக வளர்ச்சித்துறையும் வழங்கப்பட்டது. இவர்களுக்கு நாளை நடக்க உள்ள விழாவில் கவர்னர் ரோசையா பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.
[30/08 6:12 am] ‭Virendraprabu salem‬: இந்திய மனித வள மேம்பாட்டு பிதாமகர்                    மாஃபா.க.பாண்டியராஜன் .


MaFoi க.பாண்டியராஜன் விருதுநகர் மாவட்டம் ,சிவகாசி அருகே விளாம்பட்டி கிராமத்தில் கருப்பசாமி- சிவகாமிதாய் தம்பதியர்க்கு மகனாக 1959 – ஏப்ரல் 26 ஆம் நாள் பிறந்தார். பிறந்த மூன்று மாதத்திற்குள் தீப்பட்டி தொழிற்ச்சாலை தொழிலாளியான தன் தந்தையை இழந்தார். பின் தன தாய் வழி தாத்தா திரு.சங்கர் நாடார் அவர்களின் அரவணைப்பில் ஐம்பது உறுப்பினர் கொண்ட கூட்டு குடும்பத்தில் வளர்ந்தார்.படிப்பில் சுட்டியாகவும் ,விளையாட்டில் சிறந்து  விளங்கிய பாண்டியராஜன் சிவகாசி SHNV பள்ளயில் பள்ளிபடிப்பையும் ,அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லூரியில் PUC வகுப்பையும் நிறைவு செய்தார். பின் பொறியியல் மாணவர்களின் கனவு தேசமான புகழ் பெற்ற கோயம்பத்தூர் PSG கல்லூரியில் பொறியியல் பட்டம் பெற்றார். பின் ஜாம்ஷெட்பூர் புனித சேவியர் தொழிலாளர் பயிற்சி கல்லூரியில்(XLRI) எம்.பி.ஏ பட்டம் பெற்றார்.பின் வங்காளத்தில் புகழ் பெற்ற பிரிட்டிஷ் ஆக்சிஜன் கம்பெனியில் மனித வள மேம்பாட்டு துறையில் பணிபுரிந்தார் .

வங்காளத்தில் பணி புரியும் பொழுது ஆடிட்டர் பணிக்கு வந்த

ஹேமலதாவுடன் காதல் மலர்ந்து திருமணம் நடைபெற்றது. ஆதர்ஷ தம்பதிகளுக்கு முன்னுதாரனமாக விளங்கும் இத் தம்பதிகளின் முதல் குழந்தை தான் Rs.60000 முதலீட்டில் ‘’Mafoi’’ நிறுவனம் . பிரஞ்சு வார்த்தையான மாஃபா என்றால் ‘’எனது வாக்கு’ என்று பொருள்படும்.வேலை காலி இல்லை என்ற பலகை தொங்கும் காலக்கட்டத்தில் வேலைக்கு ஆட்கள் தேவை என்றும் வேலை தேடி வரும் நபர்களுக்கு காபி கொடுத்து உபசரித்து ஆலோசனை சொல்லி தகுதிகளை மேம்படுத்தி பல நிறுவனகளுக்கு ஆட்களை வேலைக்கு அனுப்பிய அணுகுமுறை இந்திய மனித வள மேம்பாடு துறையில் அதற்கு முன் இல்லாத அணுகுமுறை.

பாண்டியராஜன்,லதா தம்பதிகளின்அறுபதாயிரம் ரூபாயில் 1992 துவங்க பட்ட Mafoi நிறுவனம் 2010 ஆம் ஆண்டு தனது டர்ன் ஓவர் 1000 கோடியை எட்டியது. ஒரு கட்டத்தில் அறுபதாயிரம் ஊழியர்களுடன் தன் வேர்களை விஸ்தரித்தது. இதுவரை 3.5 லட்சம் இளைஞர்களுக்கு  உள்நாட்டிலும் ,வெளிநாட்டிலும் வேலை வாய்ப்பை உருவாக்கி தந்துள்ளார்

.மனித வள மேம்பாடு துறையில் இந்திய அளவில் பிரபலமானவராக அறியப்பட்ட பாண்டியராஜன் தான் வளர்ந்த சமுதாயத்திற்கு ஏதேனும் நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி எழுந்தது.அதன் எதிரொலிதான்



•  சென்னை ,மதுரை,விருதுநகர்,காஞ்சிபுரம்,திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று பெண்கள் சுயஉதவி குழுக்கள் மூலம் வாழ்வாதாரத்தை விளங்கும் சொர்ணம்மாள் அறக்கட்டளை.

•  இது வரை 2000 குழந்தைகளுக்கு உயிர் காக்கும் சிகிச்சை அளித்து உயிர் காக்கும் சேவை அளிக்கும் ஏகம் பவுண்டேசன்.இன்று இந்தியா முழுவதும் அரசு உதவியுடன் பல சுகாதார திட்டங்களை கொண்டு செல்கிறது. ,


•  4000 மாணவர்களுக்கு மேல் கல்வி உதவி தொகை வழங்கி பயிற்சிகள் வழங்கும் திஷாதிட்டம்

•  100 மாலை நேர கல்வி சாலைகள்.

•  விதவைகளுக்கு பொருளாதார கடன் வழங்கும்    அன்பாலயம் திட்டம்.

•  என்.ஜி.ஓ.க்களின் கோரிக்கைகளை, தேவைகளை அரசிடம் கொண்டு சேர்ப்பதற்கு, அவர்களுக்குக் கிடைக்கக்கூடிய நிதிகளை அவர்களிடம் சேர்ப்பதற்கு, நிதி திரட்டுவதற்கு நல்ல அமைப்பு வேண்டும். என்.ஜி.ஓ.க்களிடையே தகவல்கள், திறமைகள், வள வாய்ப்புகள் ஆகியவை பரஸ்பரம் பகிர்ந்து-கொள்ளப்பட வேண்டும். இதையெல்லாம் ஒருங்கிணைக்க ஒரு அமைப்பு வேண்டும். நிறைய ஏமாற்று அமைப்புகள் உள்ளன. ஆனால் நேர்மையான, அக்கறை உள்ள ஒரு அமைப்பை இதற்காக உருவாக்க வேண்டும் என்று நினைத்து அதற்காக சியோசா (Confederation of Indian Organisations for Service and Advocacy - CIOSA)  அமைப்பைக் கடந்த பத்து வருடங்களாக நடத்தி வருகிறார்.
திறமையான விளையாட்டு வீரர்களின்

திறமை பொருளாதார நிலைமையின் காரணமாக வீணாக கூடாது என்ற எண்ணத்தில் ஒலிம்பிக்கில் தமிழக வீரர்கள் சாதிப்பார்கள் என்ற நம்பிக்கை உருவாக்க திசா விளையாட்டு கழகம்(DISHA SPORTS)  ஏற்ப்படுத்தினார்.இதன் மூலம் பயிற்சி பெற்ற ஏழை விளையாட்டு வீரர்கள் இந்திய அளவில் பரிசுகளை குவித்து வருகிறார்கள்.

இது போன்று பாண்டியராஜன் அவர்களின் சேவை கரம் ஆலமரமாய் விழுது விட்டு வளர்ந்து நிற்கிறது.


தன் கணவன் மற்றோருக்கு சிறு உதவி செய்தாலே பொருள் இழப்பு ஏற்ப்படும் என எண்ணி தடுக்கும் மனைவியர் மத்தியில் லதாராஜன் அவர்கள் தன் கணவரின் எல்லா செயல்களிலும் துணை நிற்கும் அவர் தர்ம காரியங்களுக்கு முன்னால் நின்றார் என்றால் எத்தகைய அருளுள்ளம் கொண்டவர்கள் என எண்ணி பார்க்க வேண்டும்.


இவர்களின் தொண்டு நிறுவனத்தில் மட்டும் சேவை செய்ய 100க்கும் மேற்ப்பட்ட பணியாளர்கள் ஒரே குடும்பம் என்ற எண்ணத்தில்  வேலை செய்கிறார்கள் என்றால் இவர்களின் நிறுவனத்தின் சமூக பங்களிப்பை அறியலாம்.

அரசியலில் ஆச்சரிய மனிதர்.

தன் மாணவ பருவத்தில் கல்லூரி மாணவ சங்கத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். ஜனதா இயக்கத்தில் ஜெ.பி அவர்களால் கவரப்பட்டு அரசியலில் ஈடுபட்டார். தொழில் துறையில் தனக்கென முத்திரை பதித்த பின் அவரின் அரசியல் பிரவேசம் பாரதிய ஜனதா கட்சியில் துவங்கியது. அங்கு அடிப்படை உறுப்பினராக நம் மனித வள நிபுணர் தீவிர உறுப்பினர்,மாவட்ட தலைவர், மாநில வர்ததக பிரிவு தலைவர்,தேசிய கவுன்சில் உறுப்பினர் என படிப்படியாக முன்னேறினார்.

ஆனால் இவரின் வளர்ச்சியை பொறுக்காத சிலரின் நடவடிக்கையால்

அக்கட்சியில் இருந்து விலகி அப்பொழுது எழுச்சியுடன் காணப்பட்ட விஜயகாந்தின் தே.மு.தி.க வில் தன்னை இணைத்து கொண்டார். இவரின் அரசியல் களப்பணியால் ஈர்க்கப்பட்ட க��• ஏழை ,குடிசை பகுதிகளில் உள்ளதிறமையான விளையாட்டு வீரர்களின்

திறமை பொருளாதார நிலைமையின் காரணமாக வீணாக கூடாது என்ற எண்ணத்தில் ஒலிம்பிக்கில் தமிழக வீரர்கள் சாதிப்பார்கள் என்ற நம்பிக்கை உருவாக்க திசா விளையாட்டு கழகம்(DISHA SPORTS)  ஏற்ப்படுத்தினார்.இதன் மூலம் பயிற்சி பெற்ற ஏழை விளையாட்டு வீரர்கள் இந்திய அளவில் பரிசுகளை குவித்து வருகிறார்கள்.

இது போன்று பாண்டியராஜன் அவர்களின் சேவை கரம் ஆலமரமாய் விழுது விட்டு வளர்ந்து நிற்கிறது.


தன் கணவன் மற்றோருக்கு சிறு உதவி செய்தாலே பொருள் இழப்பு ஏற்ப்படும் என எண்ணி தடுக்கும் மனைவியர் மத்தியில் லதாராஜன் அவர்கள் தன் கணவரின் எல்லா செயல்களிலும் துணை நிற்கும் அவர் தர்ம காரியங்களுக்கு முன்னால் நின்றார் என்றால் எத்தகைய அருளுள்ளம் கொண்டவர்கள் என எண்ணி பார்க்க வேண்டும்.


இவர்களின் தொண்டு நிறுவனத்தில் மட்டும் சேவை செய்ய 100க்கும் மேற்ப்பட்ட பணியாளர்கள் ஒரே குடும்பம் என்ற எண்ணத்தில்  வேலை செய்கிறார்கள் என்றால் இவர்களின் நிறுவனத்தின் சமூக பங்களிப்பை அறியலாம்.

அரசியலில் ஆச்சரிய மனிதர்.

தன் மாணவ பருவத்தில் கல்லூரி மாணவ சங்கத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். ஜனதா இயக்கத்தில் ஜெ.பி அவர்களால் கவரப்பட்டு அரசியலில் ஈடுபட்டார். தொழில் துறையில் தனக்கென முத்திரை பதித்த பின் அவரின் அரசியல் பிரவேசம் பாரதிய ஜனதா கட்சியில் துவங்கியது. அங்கு அடிப்படை உறுப்பினராக நம் மனித வள நிபுணர் தீவிர உறுப்பினர்,மாவட்ட தலைவர், மாநில வர்ததக பிரிவு தலைவர்,தேசிய கவுன்சில் உறுப்பினர் என படிப்படியாக முன்னேறினார்.

ஆனால் இவரின் வளர்ச்சியை பொறுக்காத சிலரின் நடவடிக்கையால்

அக்கட்சியில் இருந்து விலகி அப்பொழுது எழுச்சியுடன் காணப்பட்ட விஜயகாந்தின் தே.மு.தி.க வில் தன்னை இணைத்து கொண்டார். இவரின் அரசியல் களப்பணியால் ஈர்க்கப்பட்டகட்சி தலைமை  இவருக்கு 2009 நாடாளுமன்ற தேர்தலில் தான் பிறந்த மண்ணான விருதுநகரில் போட்டியிட வாய்ப்பளித்தது.

 தேர்தலில் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி பிரச்சாரம் செய்த பாண்டியராஜன் தன சொந்த செல்வாக்கால் தமிழகத்திலேயே தே.மு.தி.க சார்பில் அதிக வாக்குகளை பெற்றார். அதன் பின் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் போட்டி இட்ட பாண்டியராஜன் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

அதன் பின் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற  நோக்கத்தில் அரசியலுக்கு வந்தாரோ அந்த நோக்கம் தேமுதிக உறுப்பினராக அரசியல் காரணமாக நிறைவேறவில்லை.அதனால் தமிழக முதல்வர் செல்வி.ஜெ.ஜெயலலிதா அவர்களை நேரில் சந்தித்து தன் ஆதரவை அரசிற்கு கொடுத்து விருதுநகர் மக்களின் கோரிக்கைகளை கொடுத்து , தொடர்ந்து அவர்களின் ஆதரவோடு கட்சி பணியாற்றிவருகிறார்.


சட்டமன்றத்தில் எவர் எழுந்து பேச ஆரம்பித்தால் புள்ளி விவரங்கள் அடைமழையாக கொட்டும்.


இவரின் இந்த அரசியல் மாற்றம் பலரால் பல கோணத்தில் அலசப்பட்டாலும் விருதுநகர் மக்களுக்கு என்னவோ லாபம் தான்.

அவர்களின் பல நாள் கோரிக்கைகளை நிறைவேறி வரும் தருணத்தை பாண்டியராஜன் உருவாக்கியுள்ளார் என்றால் மிகையில்லை.

• நீதி மன்றத்தில் சட்ட போராட்டம் நடத்தி  தானே வழக்கு தொடுத்து இன்று இராமமூர்த்தி சாலை ரயில்வே பால பூர்வாங்க பணிகள் துவங்கப்பட்டுள்ளது.

• முதல்வர் செல்வி ஜெ.ஜெ அவர்களை நேரில் சந்தித்து ரூபாய் 25 கோடியை விருதுநகர் நகராட்சி நூற்றாண்டு விழாவிற்கு பெற்று தந்தது இவரின் தனிப்பட்ட சாதனையாகும்.(இதில் சாலைகள்,VNPR பூங்கா சீரமைப்பு. நுழைவு வாயில்கள் , குடிநீர் தொட்டிகள் என பல அடிப்படைகட்டமைப்புகள் உருவாக்கப்பட உள்ளன)        


• விருதுநகரில் சாபக்கேடான பாதாள சாக்கடை திட்டத்தை பல லட்சங்கள் தன சொந�பல லட்சங்கள் தன சொந்த பணத்தை கொடுத்தும் முடிக்க முடியாதலால் அரசிற்கு பிரசர் கொடுத்து டெண்டர் எடுத்த் நிறுவனத்தை வெளியே அனுப்பி விட்டு தற்பொழுது 2014 இறுதிக்குள் நாலு கோடி ரூபாய்க்கு புதிய டெண்டர் கோரப்பட்டு ஆறு மாதத்திற்குள் பணிகள் முடிக்கப்பட உள்ளது.

• விருதுநகர் தலைமை மருத்துவமனைக்குள் ரூ.பத்து கோடிக்கு வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது.

• சிவகாசி –விருதுநகர் சாலை 23 கோடிக்கு அகலப்படுதப்படுகிறது.

• ஆட்சியர் அலுவலக சாலையில் மேம்பாலம் அமைக்கப்பட உள்ளது.

விருதுநகரில் இதுவரை நெடுஞ்சாலை ,பொதுப்பணித்துறை உள்ளிட்ட இதர துறைகளின் மூலம் 100 கோடிக்கும் மேல் பணிகள் நடைபெற்று வருகிறது என்றால் இதன் அனைத்திற்கும் விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு.பாண்டியராஜனின் அதீத உழைப்பு ஆதராமாக உள்ளதுஎளிமையான அரசியல்வாதி,ஒரு கரம் கொடுத்ததை மறுகரம் அறியா கொடையாளர். எந்த துறையை பற்றி இவரிடம் கேட்டாலும் குற்றால அருவியாக தகவல்களை கொட்டும் நடமாடும் விக்கிபீடியா . என இவரைப்பற்றி சொல்லி கொண்டே போகலாம் இவரின் கடின உழைப்பும், மாறாத நேர்மையும் , தான் காரணம் என்பதை நம் விருதுநகர் டைம்ஸ் வாசகர்களுக்கு சொல்லி தெரிய வேண்டியது இல்லை.

மா ஃ பா பாண்டியராஜன் உண்மையில் உழைப்பால் உயர்ந்த விருதை மண்ணின் ''ராஜன்'' தான் .

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...