பனையை காக்க களம் இறங்கிய அரசுப் பள்ளி மாணவர்கள் !

நீண்ட நாள் கனவு நனவாகிறது மகிழ்ச்சி யளிக்கிறது...பனையை காக்க களம் இறங்கிய அரசுப் பள்ளி மாணவர்கள்: ஆத்தூரை அடுத்த தியாகனூர் ஏரிக்கரையில் 5,000 பனை விதைகள் விதைப்பு.அழிவு நிலையில் உள்ள பனை மரங்களைப் பாதுகாக்கவும், ஏரி யின் கரையைப் பலப்படுத்தும்

நோக்கத்துடனும் ஏரிக்கரையில் 5 ஆயிரம் பனை விதைகளை அரசுப் பள்ளி மாணவர்கள் விதைத்தனர்.தமிழக அரசின் மாநில மரமான பனை மரம் கடும் வறட்சியை தாங்கி வளரக்கூடியது. மழைக் காலத்தில் கிடைக்கும் குறைந்த அளவு தண்ணீரையும் நிலத்தின் அடியில் கொண்டு சேர்க்கும் தன்மை கொண்டது. பனைமரத்தில் இருந்து கிடைக்கும் பதநீர், நுங்கு, பனம்பழம் மற்றும் பதநீர் மூலம் உருவாகும் கருப்பட்டி, பனங்கற்கண்டு ஆகியவை மக்க ளுக்கு ஆரோக்கியத்தைத் தரும் உணவுப் பொருட்களாக உள்ளன.கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு வரை தமிழகத்தில் 30 கோடி பனை மரங்கள் இருந்தன. கடந்த 1980-களில் பனை மரத் தொழிலை சார்ந்து 5 லட்சத்துக்கும் அதிக மானோர் வேலைவாய்ப்பு பெற்று வந்தனர். ஆனால், பனை மரத்தின் மதிப்பை நாம் மதிக்காமல் போன தால், பெரும்பாலான மரங்கள் வெட்டப்பட்டு செங்கல் சூளைக்கு இரையாக்கப்பட்டன. இதனால் பனைத் தொழில் நலிவடைந்து வருகிறது. தற்போது, தமிழகத்தில் 5 கோடி பனை மரங்கள் மட்டுமே எஞ்சி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், பனை மரங்களை வளர்க்க வேண்டும், இருக்கின்ற மரங்களைப் பாதுகாக்க வேண்டும் என்று மக்களிடையே ஆர்வம் எழுந்துள்ளது.சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்த ஆறகழூர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 200-க்கும் மேற்பட்டோர் பள்ளித் தலைமை ஆசிரியர் சிவராமன், உதவி தலைமை ஆசிரியர் ராஜேந்திரன் ஆகியோர் தலைமையில் தியாக னூர் ஏரிக்கரையில் 5 ஆயிரம் பனைவிதைகளைக் குழி தோண்டி விதைத்தனர். இப்பணியில் மாண வர்களுடன் ஆசிரியர்கள் மணி, ஆனந்தபாபு, பிரகாஷ், யுவராஜ் ஆகியோரும் ஈடுபட்டனர். இவர்கள் அனைவரும் பாராட்டுக்குரியவர்கள் பாராட்டுகிறோம் . தமிழராய்...

இதே போல் நாம்
செய்யலாமா உறவுகளே.
பதிவு போடுங்க பார்ப்போம்.
உங்கள்கருத்துகள் வரவேற்க படுகிறது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...