சுகாதாரத்தில் இந்தியாவுக்கு 143ஆவது இடம்: ஐ.நா. அறிக்கை!

உலக நாடுகளில் நிலவும் சுகாதாரம் தொடர்பாக ஐ.நா. அவை நடத்திய ஆய்வில் இந்தியா 143ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. 188 நாடுகளில் நடத்திய ஆய்வில் இந்தியாவுக்கு கிடைத்துள்ள இந்த இடம், நமது சுகாதார நிலைகள் தொடர்பாக பல கேள்விகளை எழுப்புகின்றன. நியூயார்க்கில் நடைபெற்று வரும் ஐ.நா. பொது சபை கூட்டத்தில், ‘சுகாதாரத்துறையில்

நீண்டகால வளர்ச்சிக்கான இலக்குகள்’ என்ற தலைப்பில் ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், குடிமக்களின் இறப்பு விகிதம், மலேரியா, சுகாதாரம் மற்றும் காற்று மாசுபாடு உள்ளிட்ட பல்வேறு சவால்களை அடிப்படையாகக் கொண்டு சுகாதார உலக ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

விரைவான பொருளாதார வளர்ச்சி இருந்தாலும், இந்தியா சுகாதாரத்தில் கோமரோஸ் மற்றும் கானா போன்ற நாடுகளுக்கு அடுத்த இடத்தில் இருக்கிறது. இந்தியாவுக்கு அடுத்ததாக பாகிஸ்தான் 149ஆவது இடத்திலும், வங்காள தேசம் 151ஆவது இடத்திலும் உள்ளன. இந்த அறிக்கை இந்தியாவில் நிலவும் காற்று மாசுபாட்டை மிக மோசமான ஒன்றாக சுட்டிக்காட்டுகிறது. சுகாதாரத்தில் யுத்த பூமியான சிரியா, நீண்ட கால போரால் சிதைந்த இலங்கை, சிறிய நாடான பூட்டான் போன்றவை இந்தியாவை விட சுகாதாரத்தில் முன்னேறி உள்ளன.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...