சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் 15 பேர் புதிய நியமனம்:குடியரசுத் தலைவர் ஒப்புதல்!!!

கொலீஜியம் மற்றும் சட்ட அமைச்சகம் அளித்த 15 உயர்நீதிமன்ற நீதிபதிகளின் நியமனப் பட்டியலுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்திருக்கிறார். மத்தியில் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்து நீதிபதிகளை நியமனம் செய்யும்

கொலீஜியத்திற்கும் மத்திய அரசுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. நீதிபதிகளின் நியமனம் செய்யும் கொலீஜியத்தின் அதிகாரத்தில் தலையிட்டது மத்திய அரசு. இதை கொலீஜியம் கடுமையாக ஆட்சேபிக்க, மத்திய அரசிற்கும் கொலீஜியத்திற்கும் இடையே பனிப்போர் மூண்டது. இந்நிலையில், நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் நிரப்பப்படவேண்டிய நீதிபதிகளின் நியமனம் கிடப்பில் போடப்பட்டன. இதனால் பல வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. தீர்ப்புகளும் தேங்கிக் கிடக்கின்றன. இந்நிலையில், உச்சநீதிமன்ற நீதிபதி டி.எஸ்.தாக்கூர் பிரதமர் முன்னிலையில் பகிரங்கமாக வருத்தம் தெரிவித்ததோடு கண்கலங்கினார். இந்த நிலையில்தான், தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தின் 15 நீதிபதிகளின் நியமனப் பட்டியலுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கியிருக்கிறார். வழக்கறிஞர்கள் வி.பார்த்திபன், ஆர்.சுப்ரமணியம், எம்.கோவிந்தராஜ், எம்.சுந்தர், ஆர்.சுரேஷ்குமார்,நிஷா பானு, எம்.எஸ்.ரமேஷ், எஸ்.எம்.சுப்ரமணியன், டாக்டர் அனிதா சுமந்த் மற்றும் மாவட்ட நீதிபதிகள் ஆறு பேரை, நீதிபதிகளாக நியமிக்க ஜனாதிபதி ஒப்புதல் வழங்கி உள்ளார். இந்தப் பட்டியலை கொலீஜியமும் சட்ட அமைச்சகமும் இணைந்து தயாரித்துள்ளது. இதில் ஒன்பது நீதிபதிகள் வழக்கறிஞர் சங்கத்திலிருந்தும், மீதமுள்ள ஆறு நீதிபதிகள் மாவட்ட நீதிமன்றங்களிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இந்த பதினைந்து நீதிபதிகளும் விரைவில் சென்னை உயர்நீதிமன்றங்களில் பணிபுரியத் தொடங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கொலீஜியம் மற்றும் சட்ட அமைச்சகத்தின் இந்த சமரசம் தேவையின் பொருட்டு தற்காலிகமானதா? இல்லை நிரந்தரமானதா? என்ற கேள்வி அனைவர் மனதிலும் எழுந்துள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...