டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 : ஒரு இடத்துக்கு 291 பேர் போட்டி!!!

டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வுக்கு 5,451 காலியிடங்களுக்கு 16 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். ஒரு பணியிடத்துக்கு 291 பேர் போட்டியிடுகின்றனர்.

இளநிலை உதவியாளர், வரித் தண்டலர், நில அளவர், வரைவாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் உள்ளிட்ட இடங்களை எழுத்துத் தேர்வு மூலம்
நிரப்புவதற்காக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் 4 தேர்வை கடந்த ஆகஸ்டு மாதம் 9ஆம் தேதி அறிவித்தனர். இதையடுத்து, ஆன்லைனில் விண்ணப்பங்கள் குவிய ஆரம்பித்தன. விண்ணப்பிப்பதற்கு செப்டம்பர் 8ஆம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அதற்கு முதல்நாள் தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்பட்டதால் விண்ணப்பிப்பதற்கு கால அவகாசத்தை செப்டம்பர் 14ஆம் தேதி வரை நீட்டித்தனர். இதற்கு கல்வித்தகுதியாக பத்தாம் வகுப்பு நிர்ணயிக்கப்பட்டிருந்தாலும், இந்தப் பணிக்கு இளங்கலை, முதுகலை படித்த பட்டதாரிகளும் விண்ணப்பித்தனர்.

இந்நிலையில், இந்தத் தேர்வுக்கு 15 லட்சத்து 91 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்துள்ளன. ஆனால் காலிப் பணியிடங்கள் 5,451 மட்டுமே. ஒரு பணிக்கு 291 பேர் போட்டியிடுகின்றனர். வழக்கமாக, டி.என்.பி.எஸ்.சி. நடத்தும் போட்டித் தேர்வுகளில் குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பங்கள் அதிகமாக வருவதுண்டு. இந்த தேர்வுக்கு மட்டும் காலிப் பணியிடங்கள் அதிகமாக இருக்கும் மற்றும் கல்வித் தகுதி பத்தாம் வகுப்பு ஆகிய இரண்டு காரணங்களால்தான் விண்ணப்பங்கள் அதிகமாக வருகின்றன. ஒவ்வொரு குரூப் 4 தேர்வுக்கும் பத்து லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பிப்பது வழக்கம். ஆனால் 15 லட்சத்து 91 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்தது வரலாற்றிலே இது முதல்முறையாகும்.

குரூப் 4-க்கான காலிப் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு நவம்பர் 6ஆம் தேதி தமிழகம் முழுவதும் பல்வேறு மையங்களில் நடக்கவுள்ளது. இத்தேர்வில் நேர்முகத் தேர்வு கிடையாது. இத்தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் தமிழகம் முழுவதும் நடைபெற்றுவருகின்றன.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...