54 கோடி மேகி நூடுல்ஸ் அழிக்கப்படவுள்ளது!

54 கோடி மதிப்புள்ள மேகி நூடுல்ஸ் பாக்கெட்டுகளை அழிக்க நெஸ்லே நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதற்காக ரூ.30 கோடி செலவிடப்படுகிறது.

இந்தியாவில் நெஸ்லே நிறுவனம் மேகி நூடுல்ஸ் தயாரித்து விற்பனை செய்து வருகிறது. நெஸ்லே நிறுவன தயாரிப்பான மேகி நூடுல்ஸில் அளவுக்கதிகமாக மோனோசோடியம் குளுட்டா மேட் என்ற வேதிப்பொருள் அதிகமாக இருப்பது
கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சர்ச்சையால் உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாட்டு ஆணையம் மேகி நூடுல்ஸுக்கு தடை விதித்து உத்தரவிட்டது. இதனால் நாடு முழுவதுமுள்ள மேகி நூடுல்ஸ் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டது. நெஸ்லே நிறுவனம் இந்தத் தடையை வாபஸ் பெற்றது. ஆனால் நீதிமன்றம் அந்த மேகி நூடுல்ஸ் பாக்கெட்டுகளை அழிக்க உத்தரவிட்டது. முதற்கட்டமாக பல நூறு கோடி மதிப்புள்ள மேகி நூடுல்ஸ் பாக்கெட்டுகள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள சிமெண்ட் ஆலைகளில் வைத்து அழிக்கப்பட்டன. அதில், 38,550 டன் நூடுல்ஸ் அழிக்கப்பட வேண்டியுள்ளது. அதாவது, 54 கோடி மேகி நூடுல்ஸ் பாக்கெட்டுகள் உள்ளன. முதற்கட்ட அழிப்புக்கு ரூ.30 கோடி செலவிடப்பட்டது.

தற்போது மீதமுள்ள நூடுல்ஸ்களையும் அழிக்க நெஸ்லே நிறுவனம் முடிவு செய்துள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...