உள்ளாட்சி தேர்தல் செலவு கணக்கு...உச்சவரம்பு! ரூ.85 ஆயிரத்தை தாண்டக்கூடாது!!!

 உள்ளாட்சி தேர்தலில் கோவை மாநகராட்சி வார்டு உறுப்பினராக போட்டியிடுவோர், 85 ஆயிரம் ரூபாய் மட்டுமே செலவிட வேண்டுமென உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

உள்ளாட்சி தேர்தல் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. கோவை மாவட்டத்தில், ஒரு மாநகராட்சி, ஒரு மாவட்ட ஊராட்சி, மூன்று நகராட்சி, 37
பேரூராட்சி, 228 ஊராட்சி, 12 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. மாநகராட்சியில், 100 வார்டுகள்.

மேட்டுப்பாளையம் நகராட்சியில், 33, பொள்ளாச்சியில், 36, வால்பாறையில், 21 வார்டுகள். பேரூராட்சிகளில், 585, ஊராட்சிகளில், 228 ஊராட்சி தலைவர் பதவி, 2,034 வார்டு கவுன்சிலர், ஊராட்சி ஒன்றியத்தில், 155, மாவட்ட ஊராட்சியில், 17 வார்டுகள் உள்ளன.

கிராம ஊராட்சி தலைவர், கிராம வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய வார்டு

உறுப்பினர், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் மூன்றாம் நிலை நகராட்சி, பேரூராட்சி வார்டு உறுப்பினர், நகராட்சி வார்டு உறுப்பினர் (இரண்டாம் மற்றும் முதல் நிலை), நகராட்சி வார்டு உறுப்பினர் (தேர்வு மற்றும் சிறப்பு நிலை), மாநகராட்சி வார்டு உறுப்பினர் (சென்னை மாநகராட்சி தவிர) ஆகிய தேர்தல்களில்,

போட்டியிடும் வேட்பாளர்களின் தேர்தல் செலவு உச்ச வரம்பு திருத்தி அமைக்கப்பட்டுள்ளது.

அதன் விவரம்:

மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தல் - ரூ.1,70,000, ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் தேர்தல் - ரூ.85,000, கிராம ஊராட்சி தலைவர் தேர்தல் - ரூ.34,000, கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தல் - ரூ.9,000.

பேரூராட்சி மற்றும் மூன்றாம் நிலை நகராட்சி வார்டு உறுப்பினர் தேர்தல் - ரூ.17,000, நகராட்சி வார்டு உறுப்பினர் தேர்தல் இரண்டாம் மற்றும் முதல்நிலை - ரூ.34,000, நகராட்சி வார்டு உறுப்பினர் தேர்தல் தேர்வு மற்றும் சிறப்பு நிலை - ரூ.85,000, மாநகராட்சி வார்டு உறுப்பினர் தேர்தல் - ரூ.85,000 என, உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ரூ.3 லட்சம் செலவாகும்!

அரசியல் கட்சியினர் கூறியதாவது:

வேட்பு மனு தாக்கல் செய்ய 'டிபாசிட்', கட்சியினரை வாகனங்களில் அழைத்துச் செல்தல், வார்டுக்குள் அலுவலகம், சேர், டேபிள், தொண்டர்களுக்கு தினச்செலவு, பூத் வேலைக்கு நியமித்தல், அவர்களுக்கு உணவு வழங்குதல் என, எண்ணற்ற செலவு ஏற்படும். 10 ஆயிரம் வாக்காளர் வசிக்கும் ஒரு வார்டில், குறைந்த பட்சமாக, 4,000 பிட் நோட்டீஸ் அச்சடிக்க வேண்டும். இதற்கு, 6,500 ரூபாய் செலவாகிறது. இரண்டு விதமாக, வண்ணத்தில் அச்சிட வேண்டுமெனில், 10 ஆயிரம் செலவழிக்க வேண்டும்.

ஒரு வாரம் முதல், 10 நாட்கள் வரை பிரசாரம் செய்ய வாய்ப்பு கிடைக்கும். இதற்கு மட்டும், நாளொன்றுக்கு, ரூ.10 ஆயிரம் வீதம், அதிகபட்சமாக ஒரு லட்சம் ரூபாய் வரை செலவாகும். தேர்தல் செலவினமாக குறைந்தபட்சம், மூன்று லட்சம் வரை செலவாகும்; சிலர், இன்னும் அதிகப்படியாக செலவழிப்பர்.

இவ்வாறு, அவர்கள் கூறினர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...