ஜியோ' - பிற மொபைல் நிறுவனங்கள் 'குடுமிப்பிடி' !

ரிலையன்ஸ் ஜியோ' நிறுவனத்திற்கும், பிற மொபைல் போன் நிறுவனங்களுக்கும் இடையே, தொடர்ந்து நடைபெறும் மோதலால், எந்த நிறுவனத்தை தேர்வு செய்வது என, வாடிக்கையாளர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

ஜியோ நிறுவனம், அறிமுக சலுகையாக, மூன்று மாதங்களுக்கு அனைத்து அழைப்புகள், எஸ்.எம்.எஸ்., மற்றும் இன்டர்நெட் பயன்பாடு இலவசம் என, அறிவித்துள்ளது. பின், குறைந்த கட்டணத்தில், சேவையை தர முடிவு
செய்துள்ளது. இது, மற்ற நிறுவனங்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.



வருவாய் குறைவு : துவக்கத்தில், 'ரிலையன்ஸ்' போன் வாங்குவோருக்கு மட்டும், ஜியோ, 'சிம்' கிடைத்தது; தற்போது, அனைவருக்கும் தரப்படுவதால், அதை பெற கடும் போட்டி நிலவுகிறது.

'ஏர்டெல், ஐடியா, வோடபோன், பி.எஸ்.என்.எல்.,' வாடிக்கையாளர்களும், ஜியோ சிம் பெற்று, அவற்றின் இலவச இன்டர்நெட்டை மட்டும் பயன்படுத்துவதால், போட்டியாளர்களுக்கு வருவாய் குறைந்து உள்ளது. மொபைல் எண்ணை மாற்றாமல், வேறு நிறுவனங்களுக்கு மாறும், எம்.என்.பி., வசதியால், பலரும் ஜியோவிற்கு தாவி வருகின்றனர். அவர்களை தக்க வைக்க, பி.எஸ்.என்.எல்., ஏர்டெல் போன்றவை, சில சலுகைகளை அறிவித்துள்ளன. மேலும், ஜியோவின் கட்டண விகிதம் குறித்து, மத்திய அரசிடம், மொபைல் நிறுவனங்கள் புகாரும் தெரிவித்து உள்ளன. அதேநேரத்தில், 'எங்கள் வாடிக்கையாளர்கள், ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் எண்களை அழைத்தால், இணைப்பு கிடைப்பது இல்லை' என, 'டிராய்' என்ற, தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையத்திடம், 'ஜியோ'வும் புகார் கூறியது. இதையடுத்து, பி.ஓ.ஐ., என்ற, மொபைல் அழைப்புகளுக்கான இணைப்பு மையங்களை அதிகம் தர, போட்டியாளர்கள் சம்மதித்தனர். 'அதுவும் குறைவு' எனக்கூறிய ஜியோ, 'நீங்கள் சொல்வது ஒன்று, செய்வது வேறு' என, குற்றஞ்சாட்டியது. 'ஜியோவின் தொழில்நுட்பத்தில் ஏதோ குளறுபடி உள்ளது; அதை மறைக்கிறது' என, ஏர்டெல் புகார் தெரிவித்தது. இந்தச் சண்டை, பொது வெளியிலும் தொடர்கிறது.



வதந்தி : 'தற்போது, ரிலையன்ஸ் நிறுவன அழைப்புகள் சில இடங்களில் தடைபடுகிறது; போட்டி நிறுவனங்கள், ஒத்துழைக்கவில்லை என, ஜியோ கூறினாலும், ஜனவரிக்கு பின், இதே நிலை நீடித்தால் என்ன ஆவது' என, வாடிக்கையாளர்கள் குழம்புகின்றனர். மேலும், 'வேறு நிறுவன மொபைல் போன்களில், ஜியோ சிம்கள் வேலை செய்யவில்லை' என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது; 'அது வதந்தி' என, ஜியோ சமாளிக்கிறது. ஜியோ வருகையால், பிற நிறுவனங்களின் கட்டணங்கள் குறைய துவங்கி உள்ளது உண்மை. எனினும், குறிப்பிட்ட காலத்திற்கு பின், கட்டணத்தை ஜியோ உயர்த்தினால் என்ன செய்வது என்ற எண்ணம், மக்களிடம் எழுந்துள்ளது.

ஜியோவை நம்பி போவதா; பழைய நிறுவனத்தில் தொடர்வதா என, வாடிக்கையாளர்கள் குழம்பி உள்ளனர். யார் சொல்வது உண்மை என்பது போகப் போகத்தான் தெரியும்; வாடிக்கையாளர்கள், சில மாதங்கள் பொறுமை காப்பதே நல்லது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...