ஸ்மார்ட்' போலீஸ் ஸ்டேஷன்கள் நாடு முழுவதும் அமைக்க திட்டம்!!

'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தை தொடர்ந்து, காவல் துறையை நவீனப்படுத்தும் நோக்கத்துடன், 'ஸ்மார்ட் போலீஸ் ஸ்டேஷன்' அமைப்பது குறித்து, மத்திய அரசு, தீவிரமாக ஆலோசித்து வருகிறது.

நாடு முழுவதும், நிர்வாக நடவடிக்கைகளை எளிமைப்படுத்தி, நவீன தொழில்நுட்ப வசதி களை பயன்படுத்தும் வகையில், பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை, பிரதமர் மோடி தலைமையிலான, மத்திய அரசு எடுத்து வருகிறது.




அரசு உத்தரவு :


அதன் ஒரு கட்டமாக, 'ஸ்மார்ட் போலீஸ் ஸ்டேஷன்' அமைப்பது குறித்து ஆராயும்படி, மத்திய அரசு உத்தரவிட்டது. மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு உட்பட்ட, பி.பி.ஆர்.டி., எனப்படும், போலீஸ் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு வாரியம், இதற்கான வரைவு அறிக்கையை தயாரித்துள்ளது

.

அதில், இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்: நாடு முழுவதும் போலீஸ் ஸ்டேஷன்களை,

அவை அமைந்துள்ள இடங்களுக்கு ஏற்ப, பெரு நகரங்கள், இரண்டாம் நிலை நகரங்கள், கிராமப் பகுதிகள் என, தரம் பிரிக்க வேண்டும்.

இந்த பிரிவுகளுக்கு ஏற்ப, நாடு முழுவதும் போலீஸ் ஸ்டேஷன்கள், ஒரே மாதிரியாக அமைய வேண்டும்; இவற்றின் வெளிப்புற சுவர்களுக்கு, அந்தந்த பிரிவுக்கு ஏற்ப தனித் தனி வர்ணம்பூசப்பட வேண்டும். இதன் மூலம், போலீஸ் ஸ்டேஷன் களை, பொதுமக்கள் எளிதில் அடையாளம் காண முடியும்.

தற்போது, போலீஸ் ஸ்டேஷன்களின் வெளி தோற்றம் மிகவும் மோசமாக உள்ளது; இட வசதி போதுமானதாக இல்லை; துாய்மை மிகவும் மோசமாக உள்ளது. போலீஸ் ஸ்டேஷன் குறித்து, மக்களுக்கு நல்ல அபிப்ராயம் ஏற்படும் வகையில், இவற்றை மாற்றியமைக்க வேண்டும். போலீசார் பணிபுரிய ஏற்ற இட வசதி, ஆவணங்களை பாதுகாக்கும் அறை, குடிநீர், மின்சாரம், தொலைத்தொடர்பு வசதிகள் இருக்க வேண்டும்.

ஆண், பெண் போலீசாருக்கு, தனித்தனி கழிப்பிடம், உடை மாற்றும் அறை, ஓய்வு அறைகள் இருக்க வேண்டும். புகார் அளிக்க வருபவர்களுக்கும், இந்த வசதிகள் கிடைக்க வேண்டும். போலீஸ் ஸ்டேஷன் களில், போலீசார் ஓய்வின்போது பொழுது போக்கு வதற்கான வசதிகளும், உடற்பயிற்சி செய்வதற் கான வசதியும் இருக்க வேண்டும்.


'சிசிடிவி' கேமரா வசதி :


புகார் அளிக்க வரும் பெண்களுக்கு உதவுவதற்காக, உதவி அமைப்பை உருவாக்க வேண்டும். போலீஸ் ஸ்டேஷன்கள் மற்றும் அதில் உள்ள சிறைகளை
கண்காணிக்க, 'சிசிடிவி' கேமரா வசதிகள் செய்யப்பட வேண்டும். புகார் அளிக்க வருவோ ரிடம்,தனிப்பட்ட முறையில் விசாரிக்க, தனி அறையும் இருக்க வேண்டும்.


நக்சலைட் பாதிப்பு உள்ளிட்ட பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ள பகுதி போலீஸ் ஸ்டேஷன் களின் புறச்சுவர்களில், கம்பி வேலி, கண்காணிப்பு கோபுரம், அவசர கால அபாய ஒலி எழுப்பும் வசதிகள் இருக்க வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அறிக்கை மீது, கருத்து தெரிவிக்கும்படி, பல்வேறு அமைச்சகங்கள், தொடர்புடைய துறைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன. அவ்வாறு கிடைக்கும் ஆலோசனைகள், பரிந்துரைகளின் அடிப்படையில், இவை இறுதி செய்யப்பட்டு, நாடு முழுவதும் நடைமுறைப்படுத்த, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...