நர்சிங் அங்கீகாரம் புதுப்பிப்பு படிவம் சமர்ப்பிக்க அவகாசம்!!!

தமிழகத்தில் வரும், 2017-18 கல்வியாண்டுக்கான அங்கீகாரம் புதுப்பித்துக்கொள்ளாத நர்சிங் கல்லுாரிகள், ஆன்-லைன்ல் படிவங்களை, 2017, ஜன., 16ம் தேதிக்குள் சமர்ப்பிக்க இந்திய நர்சிங் கவுன்சிலிங் அறிவுறுத்தியுள்ளது.




கடந்த, செப்., 1ம் தேதி முதல் அங்கீகாரம் புதுப்பிப்பு, புதிய பாடப்பிரிவு துவங்குதல், கூடுதல் மாணவர்கள் இடங்கள் ஆகிய பிரிவுகளில் அவசியமுள்ள கல்லுாரிகள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க, ஆன்-லைன் பதிவு துவக்கப்பட்டது. இப்பிரிவுகளுக்கு விண்ணப்பிக்கும் கல்வி நிறுவனங்களுக்குரிய தகுதிகள் குறித்தும் வெளியிடப்பட்டது.

கூடுதல் மாணவர்கள் சேர்க்கை மற்றும் புதிய பாடப்பிரிவுகள் துவக்க அனுமதி கோரும் கல்லுாரிகள், 2016 நவ., 30க்குள்ளும், அங்கீகாரம் புதுப்பிப்புக்கு, 2017, ஜன.,16க்குள்ளும் விண்ணப்பிக்க வேண்டியது அவசியம். விண்ணப்பிக்கும்போது, அதற்குரிய அரசாணைகளை இணைத்து பதிவு செய்ய வேண்டும்.

மேலும், ஆன்-லைன் மூலம் சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலிக்கப்படும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...