மதிய உணவுக்கு கட்டாய பணம் வசூலிக்க தனியார் பள்ளிக்கு இடைக்கால தடை: உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு !!!

சென்னை அருகே உள்ள ஒரு தனியார் பள்ளியின் பெற்றோர் நலச்சங்கம் சார்பில் பாரதி ராஜேந்திரன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல்  செய்தமனுவில் கூறியிருப்பதாவது: ஹீராநந்தினி பள்ளி பவுண்டேஷன் சார்பில் நாடு முழுவதும் பல இடங்களி பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இதன்  கிளை சென்னை அருகே கேளம்பாக்கத்தில் உள்ளது.

இந்த பள்ளியில் படிக்கும் மாணவர்களிடம் மதிய உணவுக்காக கட்டாயமாக கட்டணம் வசூல் செய்ய  ஒரு சுற்றறிக்கையை பள்ளி நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

இதுபோல கட்டாய மதிய உணவுக்காக பள்ளி நிர்வாகம் வசூலிப்பது சட்டவிரோதமானது. எனவே அந்த சுற்றறிக்கையை ரத்து செய்து அதற்கு தடை விதிக்க  வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு நீதிபதி எம்.சத்யநாராயணன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த  நீதிபதி, ‘‘ சிபிஎஸ்இ நிர்வாகம் பள்ளிகளுக்கு பிறப்பித்த ஒரு உத்தரவில், மாணவர்களின் மதிய உணவு ஊட்டசத்து மிக்கதா? சத்துள்ளதா? என்பதை பள்ளி  நிர்வாகங்கள் பரிசோதிக்க வேண்டும்’’ என்று தான் உத்தரவிட்டுள்ளது.

அதே  நேரத்தில் பள்ளி நிர்வாகம் தரும் மதிய உணவைத் தான் கட்டாயமாக உட்கொள்ள வேண்டும். அதற்கு பெற்றோர் கட்டணம் செலுத்த வேண்டும் என  எந்த உத்தவும் இல்லை. எனவே, அந்த தனியார் பள்ளி நிர்வாகம் மாணவர்களுக்கு வழங்கும் கட்டாய உணவுக்காக பெற்றோரிடம் கட்டணம் வசூலிப்பதற்கு  இடைக்கால தடை விதிக்கப்படுகிறது. விசாரணை வரும் 29ம் தேதிக்குத் தள்ளிவைக்கப்படுகிறது என்று உத்தரவிட்டார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...