கறுப்புப்பணம்: காலக்கெடுவில் மாற்றமில்லை!!!

“கறுப்புப்பணத்தை கைப்பற்றும் விதமாக அமல்படுத்தப்பட்ட தாமாக முன்வந்து வருமானத்தை அறிவிக்கும் திட்டத்தின் கால வரம்புக்கான கடைசி தேதியை செப்டம்பர் 30லிருந்து நீட்டிக்க முடியாது” என்று வருவாய் செயலாளர் ஹச்முக் அதியா தெரிவித்துள்ளார். இந்த வருடம் மோடி தலைமையிலான அரசு கறுப்புப்பணத்தை மீட்கும்

முயற்சியாக, ‘கடந்த காலத்தில் சரியாக வரி கட்டாதவர்கள், வருமானத்தை சரியாக குறிப்பிடாதவர்கள் மற்றும் அதிகமான சொத்து குவித்தவர்கள் 45 சதவிகித வரியைக் கட்ட வேண்டும். இல்லையென்றால், வருகிற செப்டம்பர் 30ஆம் தேதிக்குப்பின் கடும் நடவடிக்கையை சந்திக்க நேரிடும்’ என்று மத்திய அரசு அறிவித்திருந்தது.

இந்த ஆண்டுக்கான கறுப்புப்பணம் வருமான விவரம் அளிக்கும் காலக்கெடு ஜுன் மாதம் 1ஆம் தேதி முதல் செப்டம்பர் மாதம் 30ஆம் தேதி வரையில் நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் காலக்கெடு முடிவடையவுள்ள நிலையில், ஆகஸ்ட் மாத இறுதிவரையில் வெறும் ரூ.4,000 கோடி (வரி 1,800 கோடி) கறுப்புப்பணம் மட்டுமே கண்டறியப்பட்டுள்ளது. அரசுத் தரப்பிலிருந்து ரூ.1 லட்சம் கோடி கறுப்புப்பணத்தையும், ரூ.40,000 முதல் ரூ.50,000 கோடி வரையிலான கறுப்புப்பணத்துக்கான வரியையும் கைப்பற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால் ரூ.4,000 கோடி மட்டுமே கைப்பற்றப்பட்டது.

இந்நிலையில் காலக்கெடு முடிவடைய இன்னும் ஒரு வார காலம் மட்டுமே உள்ள நிலையில், அதை நீட்டிக்க பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்திருந்தனர். அதற்கு பதிலளிக்கும் வகையில், வருவாய் செயலாளர் ஹஸ்முக் அதியா தனது ட்விட்டர் பக்கத்தில், ‘வருவாய் விவரம் தெரிவிக்கும் திட்டத்துக்கு காலக்கெடு நீட்டிக்கப்படாது’ என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே கடந்த ஜூலை மாதத்தில் இத்திட்டத்துக்கான காலக்கெடுவை செப்டம்பர் 30க்கு மத்திய அரசு நீட்டித்திருந்தது. இத்திட்டத்தில் அறிவிக்கப்படும் தொகைக்கான வரியை நவம்பர் மாதத்திலும், அடுத்த 25 சதவிகித வரியை 2017ஆம் ஆண்டு மார்ச் மாதத்திலும் செலுத்த வேண்டும். மீதி தொகையை அரசின் நிதிக் கருவூலத்திடம் 2017 செப்டம்பர் மாதத்தில் செலுத்தியாக வேண்டும். இத்திட்டத்தில் தங்களது வருமானம் குறித்து அறிவிக்காமல் மோசடி செய்தவர்கள் நிதி புலனாய்வுப் பிரிவு கண்டறிந்து கடுமையாக தண்டிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...