பூத் சிலிப்' அச்சடிக்கும் பணி துவக்க... பச்சைக்கொடி! மாநில தேர்தல் கமிஷன் உத்தரவு !

உள்ளாட்சி தேர்தலில் ஓட்டளிக்க உள்ள வாக்காளர்களுக்கு வழங்க, 'பூத் சிலிப்' அச்சடிக்கும் பணியை, வரும், 27ல் துவக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

உள்ளாட்சி தேர்தலுக்கான ஏற்பாடுகள் துரிகதியில் நடந்து வருகின்றன. புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. இதன் விவரம், 'ஆன்-லைனில்' பதிவேற்றம் செய்யப்படுகிறது.
அதேநேரம், வரும், 26க்குள் திருத்த பட்டியல் தயாரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. புதிதாக பெயர் சேர்க்கக்கோரி கொடுக்கும் விண்ணப்பங்களை, வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு கடைசி நாள் வரை பெற்று, துணை பட்டியல் வெளியிடப்படும்.

மாநகராட்சி பகுதிக்கு தேவையான ஓட்டுப்பதிவுக்கு இயந்திரங்கள் பெறப்பட்டு, இருப்பு வைக்கப்பட்டு உள்ளன. அவற்றை சரிபார்த்து, பயன்பாட்டுக்கு தயார்படுத்த, 'பெல்' நிறுவன இன்ஜினியர்களின் வருகையை, தேர்தல் பிரிவினர் எதிர்பார்த்துள்ளனர். நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் பயன்படுத்துவதற்கான ஓட்டுப்பதிவு இயந்திரங்களை, ஒடிசா மாநிலம் போலீங்கர் நகரத்தில் இருந்து எடுத்து வர சென்றுள்ள குழுவினர், நாளை மாலை அல்லது, நாளை மறுதினம் காலை, கோவை வந்தடைவர் என, எதிர்பார்க்கப்படுகிறது.

மாநகராட்சி பகுதியில் தேர்தல் நடத்த, 21 உதவி தேர்தல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு வேட்பு மனு பெறுவது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் அனுப்பப்பட்டுள்ளன. மேலும், ஓட்டுச்சாவடிகள் தயார் செய்யும் பணியும் நடந்து வருகிறது. மின் இணைப்பு, குடிநீர் வசதி, முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வந்து செல்லும் வகையில், சாய்தள வசதி, மழை பெய்ய வாய்ப்பு இருந்தால், வாக்காளர்கள் பாதுகாப்பாக காத்திருக்க கட்டட வசதி இருக்கிறதா அல்லது, ஷாமியானா பந்தல் அமைக்க வேண்டுமா என்பன உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்து, சரிபார்க்கவும், தேவையான இடங்களில் அத்தகைய வசதியை ஏற்படுத்தவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

வரும் தேர்தலில் ஓட்டளிக்க உள்ள வாக்காளர்களுக்கு வழங்க, 'பூத் சிலிப்' அச்சடிக்கும் பணியை, 27ல் துவக்கி, அக்., 1க்குள் முடிக்க வேண்டும். தேர்தலுக்கு மூன்று நாட்களுக்கு முன், வாக்காளர்களுக்கு வழங்கும் பணியை துவக்க வேண்டும்; எக்காரணம் கொண்டும், இப்பணியில் கட்சியினரை ஈடுபடுத்தக்கூடாது. அனைவருக்கும் வழங்க முடியாத பட்சத்தில், ஓட்டுச்சாவடி வாயிலில் அமர்ந்து, வாக்காளர்களை உறுதிப்படுத்தி விட்டு, கொடுக்க வேண்டும் என, சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...