உள்ளாட்சித் தேர்தல்:அரசு ஊழியர்கள் போட்டியிடத் தடை!!!

தமிழகத்தில் சென்னை, திருச்சி, மதுரை, சேலம், கோயம்புத்தூர் உள்ளிட்ட 12 மாநகராட்சிகளும், 125 நகராட்சிகளும், 529 பேரூராட்சிகள், 385 ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் 12,524 பஞ்சாயத்துகள் என உள்ளன. இவற்றில், 1.50 லட்சம் பதவிகள் உள்ளன. தமிழகத்தில் உள்ளாட்சி

அமைப்புகளின் பதவி காலம் வருகிற அக்டோபர் மாதம் 24ஆம் தேதியுடன் முடிவடைகிறது. அதற்கு முன்னர், தேர்தலை நடத்தி முடிப்பதற்கு, மாநில தேர்தல் ஆணையம் ஏற்பாடுகளை செய்து வருகிறது. உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிப்பு இன்று மாலை அல்லது நாளை காலை வெளியிடப்படலாம் என்ற நிலையில் உள்ளது.

இந்நிலையில், உள்ளாட்சிப் பதவிகளுக்கு போட்டியிடுபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி மற்றும் தகுதியின்மை குறித்த பட்டியலை மாநிலத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்விவரம்… ‘ஊராட்சி அமைப்பில் போட்டியிட அந்த ஊராட்சி அமைப்பின் வாக்காளர் பட்டியலில் அவரது பெயர் இடம் பெற்றிருக்க வேண்டும். மனு தாக்கல் கடைசி நாளன்று போட்டியிடுபவர்கள் 21 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்.

தேர்தலில் போட்டியிடுவோர் கிராம நிர்வாக அலுவலர், கிராமப் பணியாளர், ஊரகம், நகர்ப்புற அல்லது தொழில் நகரம், பாளையம் (கன்டோன்மென்ட்) ஆகிய உள்ளாட்சி அமைப்பைச் சார்ந்த அலுவலர், பணியாளர், அரசு சார்புடைய நிறுவன பணியாளர், அலுவலர், மத்திய, மாநில அரசு அலுவலர், பணியாளராகவோ இருக்கக்கூடாது. இந்திய அரசில் அல்லது ஏதேனும் மாநில அரசில் பதவி வகித்திருந்து லஞ்சம் அல்லது அரசுக்கு துரோகம் இழைத்ததற்காக டிஸ்மிஸ் செய்யப்பட்ட நாளிலிருந்து ஐந்து ஆண்டுகளுக்கு போட்டியிட தகுதியற்றவர் ஆவார். 1955ஆம் ஆண்டு குடியுரிமை பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தண்டனை பெற்றவராக இருக்கக்கூடாது. மனநலம் குன்றியவராக இருக்கக்கூடாது. ஊராட்சியுடன் எந்த ஒரு வேலைக்கான அல்லது பொருட்கள் வழங்குவதற்கான ஒப்பந்ததாரராக இருக்கக்கூடாது. ஊராட்சியின் சம்பளம் பெறும் சட்ட தொழில் புரிபவராக அல்லது ஊராட்சிக்கு எதிராக வழக்கு நடத்தும் சட்ட தொழில் புரிபவராகவோ பணியமர்த்தப்பட்டிருக்கக் கூடாது.

உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டதற்கான தேர்தல் செலவினக் கணக்குகளை உரிய காலத்துக்குள் தாக்கல் செய்யாததால், மாநில தேர்தல் ஆணையத்தால் தேர்தலில் போட்டியிட மூன்று ஆண்டுகளுக்கு தகுதி நீக்கம் செய்யப்பட்டிருப்பின், அத்தகைய தகுதி நீக்க ஆணை பிறப்பிக்கப்பட்ட நாளிலிருந்து மூன்று ஆண்டுகளுக்கு போட்டியிடத் தகுதியற்றவர் ஆவர்.

கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர், கிராம ஊராட்சி தலைவர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய நான்கு பதவியிடங்களில் ஏதேனும் ஒரு பதவியிடத்துக்கு மட்டுமே போட்டியிட முடியும். இவற்றில் ஒன்றுக்கும் மேற்பட்ட பதவியிடங்களுக்கு வேட்பு மனு தாக்கல் செய்திருந்து, அவற்றில் ஏதேனும் ஒன்றை தவிர மற்றவற்றை குறித்த நாளுக்குள் திரும்பப் பெற வேண்டும். தவறும் பட்சத்தில் குலுக்கல் முறையில் ஏதேனும் ஒரு பதவியிடத்துக்கு மட்டும் நிர்ணயித்து மற்ற பதவியிடங்களுக்கான வேட்பு மனுக்கள் அனைத்தும் தேர்தல் நடத்தும் அலுவலரால் நிராகரிக்கப்படும்’ என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...