போலிச் சான்றிதழ்கள் தயாரித்த நான்கு பேர் கைது!

சென்னை அம்பத்தூரில் போலி சான்றிதழ்கள் தயாரித்த நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அம்பத்தூர் பகுதியில் போலி சாதிச் சான்றிதழ்கள், பட்டா, சிட்டா அடங்கல், போலி பத்திரம் போன்றவை தயாரிக்கப்படுவதாக அம்பத்தூர் கிராம நிர்வாக அதிகாரி மோகன் காவல்
நிலையத்துக்கு புகார் கொடுத்தார். அவர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீஸார் போலி சான்றிதழ் தயாரிக்கும் நபர்களை தீவிரமாகத் தேடி வந்தனர்.

அம்பத்தூர் பானு நகர் 26வது அவென்யூவைச் சேர்ந்த இன்பா (54) என்பவர் போலி பத்திரம் தயாரித்து வருவது தெரியவந்தது. அவரை போலீஸார் நேற்று கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்களுடைய கூட்டாளிகள் பற்றி கூறினார். அம்பத்தூர் இந்திரா நகர் வேளாங்கண்ணி தெருவைச் சேர்ந்த ரவி (46), அம்பத்தூர் கள்ளிக்குப்பம் கங்கைநகர் திலகவதி தெருவைச் சேர்ந்த ஆனந்தன் (52), அம்பத்தூர் வெங்டேஸ்வரா நகர் ஏரிக்கரை தெருவைச் சேர்ந்த வின்செண்ட் (78) ஆகிய மூவரும் போலி சான்றிதழ் தயாரிப்பதில் ஈடுபட்டிருந்தது தெரிய வந்தது. அவர்களையும் போலீஸார் கைது செய்தனர்.

அவர்களிடம் இதுகுறித்து விசாரிக்கும்போது, கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக சாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், பட்டா, சிட்டா, பெயர் மாற்றம், போலி பத்திரம் உள்ளிட்ட சான்றிதழ்களை பெரும்பாலானோருக்கு தயாரித்துக் கொடுத்துள்ளனர். ஒரு சான்றிதழுக்கு ரூ.5,000 வரை பணம் பெற்றுள்ளது தெரிந்தது.

அவர்களிடமிருந்த கோட்டாட்சியர், வட்டாட்சியர், கிராம நிர்வாக அதிகாரி, வருவாய் அலுவலர், பத்திரப் பதிவு அலுவலக சீல்கள் என 200க்கும் மேற்பட்ட அரசு முத்திரைகளையும் போலி சான்றிதழ்களையும் பறிமுதல் செய்தனர். அவர்களை அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...