'நீட் தரவரிசை பட்டியலை வெளியிட்டு மருத்துவ கலந்தாய்வை நடத்த வேண்டும்!!!

நீட் தேர்வில் வெற்றி பெற்று விண்ணப்பித்த மாணவர்களின் தரவரிசை பட்டியலை வெளியிட்டு, மருத்துவ சேர்க்கை பொது கலந்தாய்வை நடத்த வேண்டும் என, மாணவர், பெற்றோர் நலச்சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.



புதுச்சேரி மாநில சென்டாக் மாணவர்கள் பெற்றோர் நலச்சங்க தலைவர் நாராயணசாமி, பொருளாளர் வி.சி.சி. நாகராஜன் ஆகியோர் கூறியதாவது:

நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் தனியார் மருத்துவக் கல்லுாரிகளில் சேர்க்க அந்தந்த மாநில அரசுகள் கலந்தாய்வு நடத்தித்தான் சேர்க்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது. ஆனால், அவ்வாறு புதுச்சேரி அரசு நடத்தவில்லை.

இது குறித்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தபோது, கலந்தாய்வு நடத்தியதன் மூலமே, தனியார் மருத்துவக் கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கை நடந்ததாக பொய்யான தகவலை, கோர்ட்டில், புதுச்சேரி அரசு தெரிவித்தது. அதையடுத்து, வழக்கை கோர்ட் தள்ளுபடி செய்தது.

ஆனால், புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவக் கல்லுாரிகளே கலந்தாய்வு நடத்தி ரூ.25 லட்சம் பணம் பெற்றுக் கொண்டு மாணவர்களை சேர்த்துள்ளனர்.

சென்டாக் மூலம் அரசு ஒதுக்கீடு இடத்தில் சேர்ந்த மாணவ, மாணவியர் பட்டியலில், சென்டாக் தரவரிசை பட்டியலில் இடம் பெறாதவர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளது. இதில் முறைகேடு நடந்துள்ளது.

இந்த முறைகேடுகளை கலைந்த பின்னரே மூன்றாம் கட்ட கலந்தாய்வை நடத்த வேண்டும்.

பிம்ஸ் மருத்துவக் கல்லுாரியில் உயர்த்தப்பட்ட 50 இடங்களில் 18 இடங்களை அரசு ஒதுக்கீடாக பெறுவதாக முதல்வர் நாராயணசாமி சட்டசபையில் உறுதியளித்தார். அதன்படி அந்த சீட்டை பெற வேண்டும்.

மேலும், நீட் தேர்வில் வெற்றி பெற்று விண்ணப்பித்த மாணவர்களின் தரவரிசை பட்டியலை வெளியிட்டு, பொது கலந்தாய்வை, புதுச்சேரி அரசு நடத்த வேண்டும்.

அரசு இந்த கோரிக்கையை நடைமுறைபடுத்தாவிட்டால் மாணவர்கள் பெற்றோர் சங்கம் சார்பில், அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளை திரட்டி போராட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...