தனியார் பள்ளிகளுக்கு ஒரே சட்டம்; உயர்நீதிமன்றம் தள்ளுபடி!!

அனைத்து தனியார் பள்ளிகளையும் நிர்வகிக்கும் வகையில், ஒருங்கிணைந்த, ஒரே சட்டத்தை கொண்டுவர அரசுக்கு உத்தரவிட கோரி தாக்கலான வழக்கை, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது.




சாத்தான்குளம், பீட்டர் ராஜ் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனு சென்னை மாகாணமாக இருந்தபோது, தனியார் கல்வி நிறுவனங்களை நிர்வகிக்க, சென்னை கல்வி விதிகள் இருந்தன. பின், &'தமிழ்நாடு கல்வி விதிகள் என, மாற்றம் செய்யப்பட்டது. தமிழ்நாடு அங்கீகரிக்கப்பட்ட தனியார் பள்ளிகள் ஒழுங்குமுறைச் சட்டம், 1974 ல் கொண்டுவரப்பட்டது.

பள்ளிகளுக்கு அங்கீகாரம், மானியம் வழங்குவது பற்றி விதிகள் வகுக்கப்பட்டன. இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பல வழக்குகள் தாக்கலாகின. சிறுபான்மை பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கும் சட்டப் பிரிவு, பள்ளிகளுக்கு மானியம் வழங்கும் சட்டப்பிரிவு, ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளின் முன் அனுமதி, மேல்முறையீடு உரிமை, தீர்ப்பாயத்தில் முறையீடு செய்யும் உரிமை ஆகியவற்றை நீக்கிய உயர்நீதிமன்றம்,இவை உதவி பெறும் சிறுபான்மை பள்ளிகளுக்கு பொருந்தாது என, 1975 ல் உத்தரவிட்டது.

இதை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்த உச்சநீதிமன்றம், இவ்விவகாரத்தில், பல விஷயங்களை ஆராய வேண்டும். உயர்நீதிமன்றம் முழுமையாக ஆராய்ந்து தீர்ப்பளிக்க வேண்டும் என, 2003 ல் உத்தரவிட்டது. இவ்வழக்கில் தமிழக அரசுத் தரப்பு வாதங்களை முன்வைக்கவில்லை.

மேலும் பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. அரசு பதில் மனு தாக்கல் செய்யவில்லை. பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் மேல்முறையீடு செய்தால் அதை ஏற்க வேண்டும், என, பள்ளிக் கல்வித்துறை இயக்குனருக்கு, பள்ளிக் கல்வித்துறை செயலர், 1978 ல் உத்தரவிட்டார். இயக்குனர், மேல்முறையீட்டு மனுக்களை ஏற்க மறுக்கிறார்.

வழக்கு நிலுவையில் உள்ளதால், அரசு உதவி பெறும் சிறுபான்மை பள்ளி ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு, அரசு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். வழக்குகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க, பள்ளிக் கல்வித்துறைக்கு உத்தரவிட வேண்டும்.

தற்போது சிறுபான்மையினர் பள்ளிகள், சிறுபான்மையினர் அல்லாத பள்ளிகளுக்கு தனி உரிமைகள் உள்ளன. அனைத்து தனியார் பள்ளி நிறுவனங்களையும் நிர்வகிக்கும் வகையில், ஒருங்கிணைந்த ஒரே சட்டத்தை கொண்டுவர, அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

நீதிபதிகள் எஸ்.நாகமுத்து, எம்.வி.முரளிதரன் கொண்ட அமர்வு,இது தொடர்பான வழக்கு, சென்னை உயர்நீதிமன்ற அமர்வில் நிலுவையில் உள்ளது. இவ்வழக்கில் தனியாக உத்தரவு பிறப்பிக்க இயலாது. தள்ளுபடி செய்கிறோம் என, உத்தரவிட்டனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...