வாட்ஸ் அப்’ செயலிக்கு கோர்ட்டு அதிரடி உத்தரவு !!!

புதிய தனி உரிமை கொள்கைக்கு எதிராக வழக்கு ‘வாட்ஸ் அப்’ செயலிக்கு கோர்ட்டு அதிரடி உத்தரவு ‘விலகியவர்கள் பற்றிய தகவல்களை நீக்கி விட வேண்டும்!!!

புதுடெல்லி‘வாட்ஸ் அப்’ செயலியை ‘பேஸ் புக்’ சமூக வலைத்தளம் தனது அங்கம் ஆக்கி உள்ளது. அதைத் தொடர்ந்து ‘வாட்ஸ் அப்’ தனது தனி உரிமை கொள்கையில் கடந்த மாதம் 25–ந் தேதி மாற்றம் கொண்டு வந்துள்ளது. இது நாளை (25–ந் தேதி முதல்) அமலுக்கு வருகிறது.இந்த புதிய
கொள்கையின்படி, ‘வாட்ஸ் அப்’பை பயன்படுத்துகிறவர்கள் பெயர், செல்போன் எண் உள்ளிட்ட தகவல்களை ‘பேஸ்புக்’குடன் பகிர்ந்து கொள்ள முடியும்.இதற்கு எதிராக டெல்லி ஐகோர்ட்டில் ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.அந்த வழக்கில், ‘‘வாட்ஸ் அப்பின் புதிய கொள்கை, உபயோகிப்பாளர்களின் அந்தரங்க உரிமையை பறிப்பதுடன், அவர்களின் அந்தரங்க உரிமைகளை பாதிப்புக்குள்ளாக்குகிறது’’ என கூறப்பட்டுள்ளது.அந்த வழக்கை தலைமை நீதிபதி ஜி. ரோஹிணி தலைமையிலான அமர்வு நேற்று விசாரித்தது. வழக்குதாரர் தரப்பில் வாதிட்டபோது, ‘‘ஒருவர் வாட்ஸ் அப்பில் இருந்து விலகிய பிறகுகூட அவர்களைப்பற்றிய தகவல்களை வாட்ஸ் அப் தன்னிடம் தொடர்ந்து வைத்துள்ளது’’ என கூறப்பட்டது.அதைத் தொடர்ந்து ‘வாட்ஸ் அப்’பில் இருந்து விலகியவர்கள் பற்றிய தகவல்களை நீக்கி விட வேண்டும், ‘பேஸ் புக்’குடன் பகிர்ந்து கொள்ளக்கூடாது என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...