துணைவேந்தர் இல்லாமல் பணிகள் முடங்கின !

‘துணைவேந்தர் இல்லாமல் பணிகள் முடங்கி கிடக்கின்றன’ சென்னை பல்கலைக்கழக கல்விக்குழு கூட்டத்தில் உறுப்பினர்கள் குற்றச்சாட்டு!!!

சென்னை,சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் நியமிக்கப்படாமல் இருப்பதால் பல்வேறு பணிகள் முடங்கிக் கிடப்பதாக கல்விக்குழு கூட்டத்தில் உறுப்பினர்கள் குற்றம்சாட்டினர்.கல்விக்குழு கூட்டம்சென்னை பல்கலைக்கழக கல்விக்குழு கூட்டம் பல்கலைக்கழக
வளாகத்தில் நேற்று நடைபெற்றது. துணைவேந்தர் நியமிக்கப்படாததால், கல்விக்குழு உறுப்பினரும், மூத்த பேராசிரியருமான எஸ்.கருணாநிதி உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு கூட்டத்துக்கு தலைமை தாங்கினார்.சென்னை பல்கலைக்கழக பதிவாளர் பி.டேவிட் ஜவஹர், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் எஸ்.திருமகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் புதிதாக கல்விக்குழுவில் இடம்பெற்ற பேராசிரியர்களுக்கும், விருதுகள் பெற்ற பேராசிரியர்களுக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.இளநிலை, முதுநிலை படிப்புகள்இதில் பல்கலைக்கழக கல்விக்குழு உறுப்பினர் எஸ்.கருணாநிதி பேசும்போது, “2015-2016 மற்றும் 2016-2017 கல்வியாண்டில் பல்கலைக்கழகத்துடன் இணைந்துள்ள 25 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் புதிய இளநிலை, முதுநிலை பட்டப்படிப்புகள் தொடங்குவதற்கு பல்கலைக்கழகம் ஆணை பிறப்பித்து இருக்கிறது. யு.ஜி.சி., டி.ஆர்.டி.ஓ., ஐ.சி.ஏ.ஆர். உள்ளிட்ட மத்திய அரசின் நிறுவனங்கள் 35 வகையான புதிய ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்கு ஒப்புதல் அளித்து இருக்கிறது” என்றார்.இதையடுத்து கூட்டத்தில் விவாதம் நடந்தது. அப்போது கல்விக்குழு உறுப்பினர்கள் தேவதாஸ், மணிவாசகம் ஆகியோர் பேசும்போது, ‘பல்கலைக் கழகத்துடன் இணைந்து இருக் கும் கல்லூரிகள் இடஒதுக்கீடு அடிப்படையிலும், தகுதியின் அடிப்படையிலும் மாணவர் களை தேர்ந்தெடுத்ததற்கான பட்டியலை அறிவிப்பு பலகையில் ஒட்ட வேண்டும். இதுகுறித்து சம்பந்தப்பட்ட கல்லூரிகள் பல்கலைக்கழகத்துக்கும், பல்கலைக்கழக மானியக்குழுவுக்கும் தெரிவிக்க வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்தனர்.இதற்கு பதிலளித்த எஸ்.கருணாநிதி, ‘இதுதொடர்பாக அனைத்து கல்லூரிகளுக்கும் கடிதம் அனுப்பப்படும்’ என்றார்.குற்றச்சாட்டுஉறுப்பினர் காந்திராஜ் பேசும்போது, ‘சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் இல்லாமல் பல்கலைக்கழக பிரதிநிதிகள் பல்வேறு கல்லூரிகளில் நியமிக்கப்படாமல் இருக்கிறார்கள்’ என்றார்.உறுப்பினர் சத்தியநாராயணன் பேசும்போது, ‘துணைவேந்தர் இல்லாமல் எங்கள் கல்லூரிகளில் புதியதாக பாடப்பிரிவுகளை தொடங்குவதற்கு அனுமதி பெறமுடியாமல் உள்ளது. இதேநிலைமை மேலும் சில கல்லூரிகளிலும் இருக்கிறது’ என்றார். கல்விக்குழு உறுப்பினர்கள் பலரும் துணைவேந்தர் இல்லாமல் பல்வேறு பணிகள் முடங்கிக் கிடப்பதாக குற்றம்சாட்டினர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...