விரைவில் புழக்கத்திற்கு வருகிறது 2,000 ரூபாய் நோட்டு..??

இதுவரை இந்தியாவில் அதிக மதிப்புடைய ரூபாய் நோட்டு 1,000 ரூபாய், ஆனால் ரிசர்வ் வங்கி விரைவில் 2,000 ரூபாய் மதிப்புடைய நோட்டுகளைப் புழக்கத்திற்குக் கொண்டு வர உள்ளது. இதற்கான அச்சிடும் பணிகளை முழுமையாக முடிவிட்டது ரிசர்வ் வங்கி.
மைசூரில் உள்ள ரூபாய் நோட்டுகளை அச்சிடும் அச்சகத்தில் இதற்கான
அனைத்துப் பணிகளை முடித்துவிட்ட நிலையில் அடுத்தச் சில வாரங்களில் இதனை வெளியிட முடிவு செய்துள்ளது ஆர்பிஐ.
இந்திய நாணய புழக்க சந்தையில் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளின் தேவை அதிகரித்துள்ளதாலும், நாட்டின் கருப்புப் பணத்தைக் குறைக்க மத்திய அரசு 2,000 ரூபாய் நோட்டைக் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளது ஆர்பிஐ.

இதனையடுத்து அடுத்தச் சில காலாண்டுகளில் 1,000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளின் புழக்கத்தைத் தடுக்கவும் ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளதாத தகவல் வெளியாகியுள்ளது.
1938 மற்றும் 1954ஆம் ஆண்டுகளில் ரிசர்வ் வங்கி 10,000 ரூபாய் மதிப்புடைய நோட்டுகளை அச்சிட்டது, 1946 மற்றும் 1978ஆம் ஆண்டு அதன் புழக்கத்தை முடக்கியது ஆர்பிஐ.
ஆனால் இதுவரை ரிசர்வ் வங்கி 2,000 ரூபாய் வெளியீடு குறித்து எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...